
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் பலாத்காரம்
செய்யப்பட்டு பீரோவில் பூட்டப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தாலுகா பென்னிபுராமோளே பகுதியை சேர்ந்தவர்
மாலதி (வயது 17) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவருக்கு தாய் மட்டும்
உள்ளார். தந்தை ஏற்கனவே இறந்து விட்டார்.
இவர் பி.யூ.சி. முதலாண்டு படித்து உள்ளார். மாலதி தினமும் இரவு அதே
பகுதியில் உள்ள தனது சித்தி சாக்கம்மாவின் வீட்டுக்கு சென்று தூங்குவது
வழக்கம். அதேபோல், ஞாயிறன்று இரவு 10.30 மணியளவில் மாலதி தூங்குவதற்காக
தனது சித்தி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் நாகேஷ்(26) என்பவர் மாலதியை வழிமறித்து
சத்தம்போடவிடமால் வாயில் துணியை திணித்து தனது வீட்டுக்குள் இழுத்து
சென்றார்.
பின்னர் மாலதியை பலாத்காரம் செய்த நாகேஷ், மயங்கி விழுந்த மாலதியை வீட்டில்
இருந்த பீரோவில் வைத்து பூட்டி விட்டார்.
இந்த நிலையில், மாலதி தனது வீட்டுக்கு வராததால் அவளது சித்தி சாக்கம்மா
மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மாலதியை பல்வேறு
இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் நாகேஷ் தான் இரவில்
ரோட்டில் நடமாடியதாக சிலர் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மாலதியின் உறவினர்கள், நாகேசின் வீட்டுக்கு சென்று
விசாரித்தனர். அப்போது பீரோவின் உள்ளே இருந்து தட்டும் சத்தம் கேட்டது.
இதனால் பீரோவை திறக்கும்படி நாகேசிடம் அவர்கள் கூறினார்கள்.
ஆனால், அதற்கு மறுத்த நாகேஷ் சாவியை வெளியூருக்கு சென்று உள்ள தனது மனைவி
கொண்டு சென்று விட்டதாக கூறினார். ஆனாலும், அவர்களுக்கு சந்தேகம்
அதிகமானால் பீரோவின் கதவை உடைத்து பார்த்தனர்.
அங்கே மாலதி மிகவும் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை உடனடியாக உறவினர்கள்
மீட்டு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவருக்கு மருத்துவ
பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதுகுறித்து சாம்ராஜ்நகர் டவுன் போலீசில் மாலதியின் சித்தி சாக்கம்மா
புகார் செய்தார். அதன்பேரில், நாகேஷ் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு
பிரிவுகளின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்சார் அலி வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் நாகேசை பிடிக்க போலீசார் பென்னிபுராமோளேவுக்கு சென்றனர். ஆனால்,
அதற்குள் நாகேஷ் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி
வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள்
Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment