
முகத்திரையை தனது கணவரைத்தவிர நீதிபதி உள்ளிட்ட எந்த ஆண்களின் முன்பும் விலக்கி காட்ட முடியாது, என்ற முஸ்லிம் பெண்மணியின் நிலைப்பாட்டை,
"லண்டன்" கிரவுன் நீதிமன்ற நீதிபதி பீட்டர் மர்பி, ஏற்றுக் கொண்டார்.
முன்னதாக, 4 வாரங்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த, இதே நீதிபதி, நீதிமன்ற உள் அறையில்,முகத்திரையை கண்டிப்பாக விலக்கி காட்டித்தான் ஆக வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதை எதிர்த்து, அன்றைய தினம் நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய இந்த 21 வயது முஸ்லிம் இளம்பெண்,
மனித உரிமைகள் - மற்றும் மத உரிமைகள் குறித்த வழக்குகளை திறமையாக கையாளும் "பாரிஸ்டர்"சுசன் மீக் (Susan Meek) மூலம், வியாழனன்று (12/09) நீதிமன்றத்தை நாடினார்.
"பாரிஸ்டர்" சுசன் மீக் வாதிதிடுகையில் :
இங்கிலாந்து நாட்டின் "மத உரிமைகள்" குறித்த சட்டப்படி
எனது கட்சிக்காரரின் முகத்திரையை விலக்கி காட்டச் சொல்லி, இந்த கோர்ட் கட்டாயப்படுத்த முடியாது, என்றார்.
"She is entitled to wear it in private and in public.
That right to wear the niqab also extends to the courtroom.
There is no legislation in the UK in respect of the wearing of the niqab.
There is no law in this country banning it.
"என ஆணித்தரமாக வாதிட்டார்.
இதையடுத்து,
'முகத்திரை' குறித்து 4 வாரங்களுக்கு முன் பிறப்பித்திருந்த தனது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்ட நீதிபதி பீட்டர்,
இந்த வழக்கு முடியும் வரை எல்லா நாட்களிலும், முகத்திரை அணிந்த படியே நீதிமன்றத்துக்கு வரலாம் என புதிய உத்தரை பிறப்பித்தார்.
பெண் காவலர் ஒருவரை நியமித்து, அவர் மூலம் முகத்திரையை விலக்கி அடையாளம் சரிபார்த்துக் கொள்ளப்படும் என்றார், இங்கிலாந்தின் நீதிபதி, பீட்டர் மர்பி.
No comments:
Post a Comment