Wednesday, September 4, 2013
கோத்தாவின் உரை முஸ்லிம் மக்களை இழிவுப்படுத்துவதாக உள்ளது: முஜிபூர் ரஹ்மான்
நாட்டில் உள்ள முஸ்லிம்களை தீவிரவாதிகளாக அரசாங்கம்
சித்தரிக்கின்றது. அதன் உச்சகட்ட உறுதிப்பாடாகவே பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷவின் உரையும் அமைந்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின்
மேல் மாகாணசபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் தீவரவாதிகள் என்பதை சிங்களவர்கள் மனதில் புகுத்தி
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையினை தூண்டும் செயற்பாட்டினை அரசாங்கம்
கைவிட வேண்டும். முஸ்லிம்களுக்கும் சம நீதி, சட்டங்களை நிலைநாட்ட வேண்டும்
எனவும் அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment