

கண்டி மஹியாவ பிரதேசத்தில் உள்ள அஸாத் சாலியின் அலுவலகம் மீது பலம் வாய்ந்த கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மஹியாவ பகுதியில் உள்ள அஸாத் சாலியின் ஆதரவாளர் மொஹமட் ஹக்கின் வீட்டில் அமைந்திருந்த அஸாத் சாலியின் அலுவலகம் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முக்கியஸ்தர் தலைமையில் இங்கு வந்த குண்டர்கள் அலுவலகத்தின் பதாதைகள் கட்அவுட்கள் என்பனவற்றுக்கு தீ வைத்துள்ளதோடு பாரிய சேதத்தையும் விளைவித்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிடும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அஸாத் சாலி நாளை மறுதினம் இடம்பெறவுள்ள தோதலில் அமோக வெற்றியீட்டுவார் என்பது பெரும்பாலும் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து மஹியாவ பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
இது ஒரு அப்பட்டமான தேர்தல் வன்முறை.இதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் இது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான கேவலமான செயல்களால் மக்களால் உறுதி செய்யப்பட்டுள்ள அஸாத் சாலியின் வெற்றியை யாரும் தடுத்து விட முடியாது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment