
September 20, 2013Time: 8:22 PM | 0 comments122 views
12.09.2013
ஊடக அறிக்கை
வட, வடமேல் மற்றும் மத்திய
மாகாணங்களுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இத்தேர்தல் காலங்களில்
பிரச்சினைகள், அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஒழுக்கவிழுமியங்களைப் பேணி
நடந்துகொள்ளுமாறு அரசியல்வாதிகள் உட்பட அனைத்து தரப்பினர்களையும் அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.
ஓவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும்
வாக்குரிமையுண்டு. எனவே தத்தமது வாக்குரிமையை வீணாக்காமல் உரிய முறையில்
பயன்படுத்துமாறும் அமைதியான முறையில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று
சுதந்திரமாக வாக்களித்துவிட்டு அவ்விடங்களில் தரித்து நேரத்தை வீணாக்காது
திரும்பிவிடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
தேர்தல் நடைபெறும் நாட்களில்
வாக்குச்சாவடிகளுக்கு அண்மித்த இடங்களில் கூட்டம் கூட்டமாக
நின்றுகொண்டிருப்பதையும் வீண் தர்க்கங்களில் ஈடுபடுவதையும் பொய் வதந்திகளை
பரப்புவதையும் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்துகொள்வதையும்
தவிர்ந்துகொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை
கேட்டுக்கொள்கின்றது.
அஷ்ஷைய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments:
Post a Comment