Thursday, September 26, 2013

கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் டேட்டிங் போக போறீங்களா? முதல்ல இத படிங்க...

காதலானது எந்நேரத்திலும், எவர் மீது வேண்டுமானாலும் வரும். அதிலும் இன்றைய காலத்தில் காதலிக்காமல் இருப்பவர்களைப் பார்க்கவே முடியாது. மேலும் இந்த காதல் ஒருவர் மீது வருவதற்கு எந்த ஒரு காரணமும் தேவையில்லை. காரணத்தோடு வரும் காதலை விட, காரணம் மற்றும் எதிர்பார்ப்பு இல்லாமல் வரும் காதல் சிறந்தது. அந்த வகையில் ஒருவர் மீது காதல் வந்துவிட்டால், அவர்களை புரிந்து கொள்வதற்கு, இன்றைய காலத்தில் மேற்கொள்ளும் ஒரு செயல் தான் டேட்டிங். நிறைய பேர் டேட்டிங் என்று சொன்னால் கோபப்படுவார்கள். ஏனெனில் அதன் உண்மையான அர்த்தம் தெரியாததாலேயே ஆகும். ஆனால் உண்மையில் டேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் சரியாக புரிந்து கொள்ள, இருவரும் அமைதியான ஒரு இடத்திற்கு செல்வதாகும். அந்த வகையில் நல்ல கலகலப்புடன் இருக்கும் ஆணுடன் டேட்டிங் சென்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களே நம்மை பேச வைத்து விடுவார்கள். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட ஆணுடன் சென்றால், அவர்களை எளிதில் பேச வைப்பது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் அத்தகையவர்கள் எதையும் வெளிப்படையாக பேசமாட்டார்கள். எப்போதும் அமைதியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். ஆகவே அந்த மாதிரியான ஆணுடன் டேட்டிங் செல்வதாக இருந்தால், அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சில முக்கியமான டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவ்வாறு நடந்தால், நிச்சயம் அவர்களது கூச்சத்தைப் போக்கி, அவர்களது நடவடிக்கையை மாற்றலாம்.

No comments:

Post a Comment