அமெரிக்காவில் தேனிலவு சென்ற ஒரு புதுப்பெண் தனது கணவரை மலை மேலிருந்து தள்ளி கொலைச் செய்துள்ளார்.
திருமணமாக ஒரு வாரகாலமே ஆன நேரத்தில்,
ஜோர்டான் என்ற 22 வயது பெண்ணும், கோடி என்ற 25 வயது ஆணும் தேனிலவிற்கு
செல்ல திட்டமிட்டு சென்றனர்.
இந்நிலையில், திருமணம் செய்துக்கொண்டது
குறித்து ஜோர்டனுக்கு மாற்று கருத்து இருந்ததாக தெரிகிறது. அவர்கள் அன்று
இரவு கிளேசியர் தேசிய பூங்காவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இதற்கு முன் ஒரு நண்பருக்கு எஸ்.எம்.எஸ்
அனுப்பிய ஜோர்டான், நான் இது குறித்து எனது கணவரிடம் பேசவுள்ளேன், இன்று
இரவுக்குள் நான் உனக்கு பதிலளிக்காவிட்டால் ஏதோ விபரீதமாக நடந்துள்ளது என
புரிந்துக்கொள் என அனுப்பியிருக்கிறார்.
அன்று இரவு அந்த இடத்தில் ஜோர்டனுக்கும்,
கோடிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோர்டான்
அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்றுள்ளார். அவரை தடுத்து நிறுத்த
ஜோர்டானின் கையை பிடித்த கோடியை ஜோர்டான் வேகமாக தள்ளிவிட்டதில் அவர்
மலையின் உச்சியிலிருந்து பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.
இதனை அடுத்து போலீசாரிடம் தகவகளித்த
ஜோர்டான், கோடியை காணவில்லை எனவும், அவர் அவரது நண்பருடன் சென்றிருந்தார்
எனவும் பொய் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். போலீசார் விசாரணை
மேற்கொண்டப்போது தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோர்டான் நடந்தவற்றை
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment