Wednesday, September 18, 2013

கத்தாரில் இஸ்லாமிய மாநாடு..


 அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் 

ஹஜ் இஸ்லாத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்று. ஆனால் வசதி இருந்தும் உதாசீனப் படுத்துபவர்கள் உலகில் அதிகம். 

வசதி என்றால் என்ன என்ற தெளிவு இல்லாததே இதற்க்கு முக்கிய காரணமாகும். இந்தத் தெளிவை நாம் எப்போதுபெறுவது, வசதி இருந்தும் ஹஜ் கடமையை நிராகரித்த பாவிகள் பட்டியலில் நாமும் உள்ளோமா என எப்போது சுய விசாரணை செய்வது. 
 
இப்ராஹீம் நபி, இன்று இந்த உலக மக்கள் முஸ்லிம் என்பதற்காகப் படும் அனைத்துக் கஷ்ட்டங்களையும் தனிமனிதராய் இருந்து சந்தித்தவர், வாழ்வின் அணைத்து சோதனைகளையும் வென்று சாதித்தவர். எல்லாத் தொழுகைகளிலும் அவரின் பெயர் நினைவூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றது, உலகம் அழியும்வரை அது தொடரும். இவரின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான், நாம் பெற்ற படிப்பினைதான் என்ன ?

இவை அனைத்தையும் விளக்கும் நோக்கில் ஹஜ் விழிப்புணர்வு மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளோம். கலந்து கொண்டு பயன் பெறுங்கள் மற்றவர்களையும் கலந்து பயன்பெறத் தூண்டுங்கள்.

தகவல்: A.C.N.Mohamed

No comments:

Post a Comment