
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவுப்
ஹக்கீமின் அமைச்சுப் பதவி அமைச்சரவை மாற்றத்தில் மாற்றப்படவுள்ளதாக
நம்பகரமாகத் தெரியவருகின்றது.
புதிய அமைச்சரவை மாற்றம் மிக
விரைவில் இடம்பெறவுள்ளதால் சர்ச்சைக்குரிய அமைச்சராகக் காணப்படும்
ஹக்கீமிடமிருந்து நீதி அமைச்சை தூக்கி தபால் தொலைத் தொடர்புகள் அமைச்சுப்
பதவியை வழங்குவதற்கு மேல்மட்டம் தீர்மானித்துள்ளதாம்.
அரசாங்கத்திற்கு
எதிரான கருத்துக்களைக் கொண்ட அமைச்சர் ஹக்கீம் முக்கிய அமைச்சுப் பதவியில்
இருப்பதன் காரணமாக அரசு பல தா்மசங்கடங்களை எதிர்நோக்கியுள்ளது. இதனை
அமைச்சரவை மாற்றத்தின் மூலம் சீர்செய்து கொள்ளலாம் என மேல்மட்டம்
எண்ணியுள்ளது.
இதேவேளை, அமைச்சர் அதாஉல்லாவுக்கு கிழக்கு
அபிவிருத்தி அமைச்சுப் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டு வழங்கப்படவுள்ளதாக
கதைகள் கசிந்துள்ளது.
அரசாங்கத்தின் மிக நெருக்கமான விசுவாசியான
அதாஉல்லாவை கிழக்கி்ல் பலமாக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட
அமைச்சு வழங்கப்படவுள்ளதாம்.
சில வேளை மாவட்ட அமைச்சுப் பதவி
முறை அமுல்படுத்தப்பட்டால் அதாஉல்லாவுக்கு அம்பாரை மாவட்ட அபிவிருத்தி
அமைச்சுப் பதவி நிச்சயம் கிடைக்குமாம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரின்
நிலை பரிதாபம்தான்.
No comments:
Post a Comment