

நாற்பது வயதிலும்
இளமையோடு இருக்க விருப்பமா? உணவு, உடற்பயிற்சி, தெளிந்த மனம் இந்த மூன்று
விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அழகும், இளமையும்
ஆர்ப்பரிக்கும்'' என்கிறார்கள் டயட்டீஷியன் தாரணி, உடற்பயிற்சி நிபுணர்
சதீஷ், மனநல மருத்துவர் அபிலாஷா.
உணவு
'பெரும்பாலான பெண்கள் புற அழகைப் பற்றிக் கவலைப்படுவார்களே தவிர உடல் ஆரோக்கியத்துக்கான எந்த விஷயத்தையும் கடைப்பிடிப்ப தில்லை. உணவு என்பது வெறும் உள் உறுப்புக்களின் ஆரோக்கியம் மட்டுமல்ல, புற அழகிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 40 வயதை நெருங் குகையில், உடலில் சக்தி குறைந்து, தசைகள் தளர ஆரம்பிக்கும். என்ன சாப்பிட்டால் இதைத் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து அதை 30 வயதிலேயே ஆரம்பித்துவிட்டால் 40 வயது என்ன 75 வயது வரைகூட ஆரோக்கியமாக இருக்கலாம்!
40 வயதில், பெண்களுக்கு
கால்சியம் மற்றும் புரதச்சத்துக் குறைபாடுகள் தலைகாட்டும். சின்னசின்ன
விஷயங்களில் அக்கறை செலுத்தினால் போதும் அதிலிருந்து மீண்டுவிடலாம்.
இந்த வயதில் உடல்பருமன்
இன்னொரு பெரும் பிரச்னை. எண்ணெய் சேர்த்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது
நல்லது. ஒரு மாதத்துக்கு குடும்பம் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் எண்ணெய்
போதுமானது. வெளியில் சாப்பிடும் நாட்கள் அதிகம் இருந்தால், ஒன்றரை லிட்டர்
எண்ணெய் மட்டுமே போதும்.
அசைவப் பிரியர்கள்,
வாரத்துக்கு இரண்டு நாட்கள் அசைவம் சாப்பிட்ட£ல், மற்ற ஐந்து நாட்கள்
பருப்பு வகைகள், பால், தயிர் போன்ற புரதச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்
கொள்ளவேண்டும்.
சாதத்தைக் குறைத்து,
காய்கறிகள் அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம். அவரைக்காய், முட்டை கோஸ்,
பீன்ஸ் மற்றும் நீர்க் காய்களான சௌசௌ, புடலங்காய், பூசணிக்காய் ஆகியவை
அடிக்கடி உணவில் இடம் பிடிப்பது நல்லது. பட்ஜெட்டில் இடிக்கும் என்று
பழங்களைத் தவிர்க்காமல், தினமும் மூன்று வகை பழங்களை கட்டாயம் எடுத்துக்
கொண்டால் உடலுக்கு ஆன்டிஆக்சிடென்ட் கிடைக்கும். தினம் ஒரு கீரையை உணவில்
எடுத்துக் கொள்வது, இரும்புச்சத்து குறைபாடு இல்லாமல் உடலை வலுவாக்கும்'
என்ற தாரிணி, ஒரு நாளில் இருக்கவேண்டிய புரதம், கால்சியம் சத்துக்களை
பட்டியலிட்டார்...
400 எம்.எல். டோன் செய்யப்பட்ட பால் அல்லது தயிர்.
பாலில் 2.5 சதவிகிதம்தான் கொழுப்புச் சத்து இருக்க வேண்டும்.
அரை கப் சமைத்த பருப்பு, தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது மீன், ஒரு முட்டை.
கோழி மற்றும் மீனை வறுத்துச் சாப்பிடக்கூடாது. வேக வைத்து அல்லது குழம்பாகச் செய்து சாப்பிடவேண்டும்.
உடற்பயிற்சி
மார்ஷல்ஆர்ட் மற்றும் உடற்பயிற்சி நிபுணர் சதீஷ்.
உடல் எடை கூடினால்,
தோற்றத்தில் முதுமைத் தெரியும். ஃபிட்டாக இருப்பது மிகவும் கஷ்டமான விஷயம்
இல்லை. வீட்டிலேயே செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து
வந்தாலே போதும்.
முதன்முதலில் உடற்பயிற்சி செய்ய
நினைப்பவர்கள், புத்தகத்தைப் படித்து, டி.வி-யைப் பார்த்து பயிற்சியில்
ஈடுபடக்கூடாது. எல்லாருக்கும் எல்லாப் பயிற்சிகளும் பொருந்தாது.
மருத்துவரிடம் அல்லது தேர்ந்த உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனைப் பெற்றப்
பிறகே தொடங்கவேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி முதல் 45
நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
இளமையாகஇருக்க, ஒன் லெக்
டெட் லிஃப்ட் வித் டம்பிள் ரோ, ஸ்குவாட் வித் ஷோல்டர் ப்ரெஸ், லன்ஜஸ் வித்
பைசெப்ஸ் கர்ல், ட்ரை செப்ஸ் டபுள் ஆர்ம் எக்ஸ்டென்ஷன் வித் காஃப் ரைஸ்
போன்ற பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்.
இதன்மூலம் கை, வயிற்றுப்
பகுதி, தோள் பட்டை, புஜம், கை, கால், பின் தொடை, இடுப்பு போன்ற தசைகளை
உறுதியாகும். தேவையற்ற தசைகள் குறையும்.
பயிற்சிகளைச் செய்ய
ஆரம்பித்த முதல் சில நாட்கள், உடல்வலி இருக்கும். ஆனால், நல்ல பலன்
கிடைக்கும். ஏனெனில் இவை ஒட்டுமொத்த உடலுக்கானப் பயிற்சிகள்' என்கிறார்
சதீஷ்.
மனம்
மனநல மருத்துவர் அபிலாஷா
'மனசே சரியில்லை’ -
அடிக்கடி எட்டிப் பார்க்கும் வெறுப்பு நிறைந்த வார்த்தைகள் இவை. 40 வயதை
'மிட் லைஃப்’ என்போம். வருமானம், பிள்ளைகள் திருமணம், பணப் பிரச்னை,
குடும்ப சூழல் என நெருக்கடிகள் நிறைந்த காலக்கட்டம் இது. அதிக பொறுப்புகளை
முதுகில் சுமக்க நேரிடும். பதின் வயதில் பிள்ளைகள் இருப்பதால், தலைமுறை
இடைவெளிப் பிரச்னைகள் வாட்டும். இவை நாளடைவில் ஒரு சோர்வு மனநிலைக்குத்
தள்ளிவிடும். இந்தக் கவலையே வயதைக் கூட்டிக் காட்டும். 'இனிமே எனக்கென்ன’
என்று வாழ்வின்மீதான, பற்றுதல் குறைந்து அழகு ஆரோக்கியத்தின் மீது அக்கறை
குறையும். பெண்கள் மெனோபாஸ் பிரச்னையால் திணறுவார்கள். இதை எதிர்கொள்ள,
தினமும் காலையில் 'ப்ரிஸ்க் வாக்கிங்’ செல்லுங்கள். வெளிக்காற்று உங்கள் உடலையும், மனதையும் புத்துணர்வாக்கும்.
எதிர் காலத்தை நினைத்து கவலைப்படாதீர்கள்.
நேர மேலாண்மை கற்றுக் கொள்ளுங்கள்.
சின்னச் சின்ன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வதன் மூலம் ஆத்மதிருப்தி கிடைக்கும்.
குறை சொல்வதை விடுத்து, ஆக்கபூர்வமான விஷயங்களில் ஆர்வம் காட்டலாம்.
தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்யலாம்.
நம்மை நாம்
அழகுப்படுத்திக் கொள்ளும்போது, மனம் சந்தோஷத்தில் மிதக்கும். ஒவ்வொரு
நொடியையும் ரசித்து வாழுங்கள். உங்களை நீங்களே ரசிப்பதன் மூலம், உடலும்,
மனமும் புத்துணர்ச்சி பெற்று, எனர்ஜியுடன் இருக்கலாம்'' என்கிறார்
அபிலாஷா.
அரோமா தெரபிஸ்ட் மற்றும் அழகுக்கலை நிபுணர் கீதா அசோக்
30
வயதைக் கடந்துவிட்டாலே, தலையணை வைத்துப் படுப்பதைத்
தவிர்த்துவிடவேண்டும். இது கழுத்துப் பகுதியில் சதை மடிப்புகள் விழாமல்
தடுக்கும். முகத்துக்கு நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் சருமத்தில்
சுருக்கம் வராது.
தினமும் பயத்தம் மாவு பயன்படுத்துவது முகத்தை பளிச்சென காட்டும்.
ஒருநாள்
விட்டு ஒரு நாள் தலைக்குக் குளிப்பது, வாரம் ஒரு முறை எண்ணெய்த் தேய்த்து
மசாஜ் செய்து குளிப்பது, மாதம் ஒருமுறை வீட்டிலேயே முகத்துக்கு 'பழ பேக்’
போடுவது என ஒரு சார்ட் போட்டு செயல்பட்டால், உடலில் சோர்வு இருக்காது.
சருமம் சுருக்கம் இல்லாமல் அழகு கூடு
No comments:
Post a Comment