Saturday, September 28, 2013

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணி கூறும் ஜனாதிபதி !



இலங்கையில் மத சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்படுகிறது அதை தடுக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அல் ஜஸீரா ஊடகவியலாளர் Video ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  கேள்வி முன்வைத்த போது .
மஹிந்த ராஜபக்ஷ இப்படி பதில் வழங்கியுள்ளார்:- ,அப்படிஇல்லை..! , .. , சில சம்பவங்கள் , தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. அவற்றுக்கான பின்னணியை…  ஏன் அவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று நீங்கள் கண்டிப்பாக  பார்க்க வேண்டும்.
சில சம்பவங்கள் , ஆறு , ஏழு  வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்பட்டுள்ளாள். அப்போது இயற்கையாக  அவர்கள் சென்று அவர்களை தாக்குவார்கள் அவர்கள் எந்த சமூகத்தவர்களாக , மதத்தவர்களாக  இருந்தாலும் சரி , மக்கள் இதை கேள்விப் படும்போது குழப்பம் அடைவார்கள் . இதேபோன்ற சம்பவங்கள் சில  இடம்பெற்றிருக்கிறது. எல்லா சம்பவங்களுக்கும் சில பின்னணிகள்     உண்டு.
நாளை நினைக்கிறேன்   இந்த நாட்டில்தான் ஹிந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும்  கத்தோலிக்கர்கள் , கிறிஸ்தவர்கள் கூட தமது மதத்தை எந்த பிரச்சினையும் இன்றி அனுஷ்டித்துவருகிறார்கள்
227 சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுள்ளது என்று நவநீதம் பிள்ளை கூறுகிறார் ….  என்று கேள்வி முன்வைக்கப் பட்டபோது.
இல்லை .இது அனைத்து அர்த்தமற்றவை . அந்த பட்டியலை என்னிடம் தாருங்கள் நான் பார்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்


No comments:

Post a Comment