Thursday, September 5, 2013

மோ-சைக்கிள் ஓட்டியபடி மார்பில் தாய்ப்பால் புகட்டிய பெண்மீது வழக்கு! (படம் இணைப்பு)

http://www.tamilcnns.com/wp-content/uploads/2013/09/cen_moped-feed.jpg
வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய படியே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் ஒருவர் எதேட்சையாக கமெராவில் சிக்கினார்.
இச் சம்பவம் சீனாவின் Henan மாகாணத்தில் உள்ள Yuzhou நகரத்தின் போக்குவரத்து நெரிசல் மிக்க பாதையில் நடந்துள்ளது.
இதனை நேரில் கண்டு படம்பிடித்த நபரின் சாட்சியில்…
குறித்த பெண் வீதியில் வேகமாக மோட்டார் வண்டி செலுத்திக்கொண்டிருந்தபோது, திடீரென தனது டீசேர்ட் ஐ உயர்த்தி, வெளிப்பட்ட மார்பகங்கள் மூலம், தனது 18 மாதங்கள் மதிக்கத்தக்க குழந்தைக்கு பால் புகட்டியதாக தெரிவிக்கபட்டிருக்கிறது.

இச் சம்பவம் தொடர்பாக குறித்த நபரால் பொலீஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தனதும், தனது குழந்தையினதும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வண்ணம் செயற்பட்டதாக குறித்த பெண்ணின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment