
நடந்து முடிந்த 3 மாகான சபைக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளை ஒட்டு மொத்தமாக கூட்டிப் பார்கின்ற போது;
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1,504,273
இலங்கை தமிழரசுக் கட்சி – 35,3595
ஐக்கிய தேசியக் கட்சி – 590,888
ஜனநாயகக் கட்சி – 91,523
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 52,409
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 29,285
மக்கள் விடுதலை முன்னணி – 33,799
மலையக மக்கள் முன்னணி – 24,913
இதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 மாகாணத்திலும் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளான 1,504,273 ஐ ஏனைய அணைத்து கட்சிகளும் பெற்ற மொத்த வாக்குகளுடன் ஒப்பிட்டு நோக்கும் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பானது மேலதிகமாக 327,861 வாக்குகளை பெற்றுள்ளது.
இன்றைய அரசு இந்த சூழ்நிலையில் ஒரு ஜனாதிபதி தேர்தல் நடக்குமாக இருந்தால் வடக்கை முழுமையாக தோற்கடிப்பதற்கு இந்த இரண்டு மாகானங்களும் போதும் என கருதலாம்.
இதன் படி இன்று சிங்கள மக்கள் ஏறக்குறைய முழுமையாக ஒற்றுமை பட்டுள்ளனர். தமிழ் மக்கள் ஒற்றுமை பட்டுள்ளனர் என்பது பாரிய தாக்கத்தினை உண்டு பண்ணுமா என்பதை விட சிங்கள மக்களின் ஒற்றுமை என்பது பல பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம்.
இந்த தேர்தல் முடிவு மூலம் இனத்துவேசம் உச்ச நிலையில் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. அதன் கருத்து யாதெனில் சிங்களவன் சிங்களவனையும் தமிழன் தமிழனையும் ஆழ வேண்டும் எனும் கருத்து மேலோங்கி இருக்கிறது.
சிங்கள மக்களிடையே இன ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் பால் சிங்கள மக்களை கவர்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகவே இன்றைய அரசு இந்த தேர்தல் முடிவை பயன்படுத்தும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
சிங்கள மக்களிடையே இன்று ஓரளவுக்கு இருக்கும் இன துவேசம் மேலும் ஒரு படி முன்னேறுவதற்கான வாய்ப்பே இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்தி இருக்கிறது.
உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்களது மார்க்கம் என்ற பாணியில் தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.
இது எதிர் காலத்தில் எத்தகைய தாக்கங்களை உண்டு பண்ணும் என்பது மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
இந்த அரசை பலமடைய செய்கின்ற பல விடயங்கள் உண்டு அவற்றில் முதன்மையானதுதான் இனத்துவேசம்
தமிழர்களுக்கு வடக்கு கிழக்கை கொடுப்பதா என்கின்ற கோசம் தெற்கில் சிங்கள மக்களை ஒற்றுமை படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.
இவ்வாறான சூழலில் சிறு பான்மை மக்கள் வெற்றி பெற்றது போன்று தென்படும் ஆனால் அங்கு எதுவும் செய்ய முடியாது மாறாக மேலும் மேலும் சிங்கள மக்களையும் இன துவேசிகளையும் ஒன்றுபடுத்தும்.
அத்துடன் வடக்கு கிழக்கு மாத்திரம் அல்ல முழு நாட்டில் உள்ள சிறு பன்மை மக்களும் ஒற்றுமை பட்டாலும் சிறு பான்மை மக்கள் நினைப்பதை வெற்றி கொள்ள முடியாது அவ்வாறு பெறும் வெற்றி சாதனை செய்ய முடியாத சோதனை களமாகவே இருக்கும்.
எனவேதான் இன்றைய இந்த பலம் பொருந்திய அரசின் மிகப் பெரும் மூலதனமாக இன துவேசம் காணப்படுகிறது என்பதை சிறு பான்மை சமூகம் உணர மறுப்பது வேதனை தரும் விடயமாகும்.
No comments:
Post a Comment