தலைவர் அவர்களே! சிறப்பு அதிதிகளே!
கனவான்களே! சீமாட்டிகளே! கென்யாவின் சந்தைத் தொகுதியில் நடத்தப்பட்ட
பயங்கரவாத தாக்குதலினால் தமது அன்புக்குரியவர்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு
முதலில் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சுமார்
மூன்று தசாப்தங்களாக எண்ணிக்கையில் அதிகளவிலான பயங்கரவாத தாக்குதல்களினால்
பாதிக்கப்பட்டிருந்த நாம் இந்த கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கின்றோம்.
தலைவர் அவர்களே!
ஐக்கிய நாடுகள் அரசுகளுக்கிடையில்
ஒத்துழைப்பை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி விவாதத்திற்குட்பட்டதும்
விவாதத்திற்குட்படாததுமான பல விடயங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்காக உலக
மேடை ஒன்றை வழங்கியுள்ளது. உலக அமைப்பின் அத்தியாவசிய அடிப்படையாக
இருக்கின்ற நாடுகளை சமமாக நடத்துகின்ற கோட்பாட்டை பாதுகாத்துக்கொள்வதும்
அதிலேயே இணைந்திருப்பதும் நாம் கட்டாயமாக செய்யவேண்டிய பணியாகும்
பொருளாதார மற்றும் அரசியல் என்ற எந்த
விடயத்திலும்கூட அனைத்து சர்வதேச நடவடிக்கைகளின் அடிப்படையாக இருக்க
வேண்டியது சமத்துவமாகும்.ஐக்கிய நாடுகளின் செயலாற்றுகையை ஆராய்கின்றபோது
முக்கியமான அடிப்படை பிரச்சினைகளை மூடிமறைத்து அரசியல் தன்மை கொண்ட
விடயங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதைக் காண முடிகிறது.
அது உலக சமூகத்தில் பெரும்பான்மையாக
இருக்கின்ற சிறப்புரிமை குறைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களை பாதகமான
முறையில் பாதித்துள்ளது. புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களில்
அர்ப்பணிப்புடன் ஈடுபடுவதுநன்னோக்கமுள்ள எதிர்பார்ப்புக்களை
உருவாக்கியுள்ளது.
அதன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும்
இறுதி காலப்பகுதியை துரிதமாக நெருங்கிக்கொண்டிருப்பதனால் அது தொடார்பான
முன்னேற்றத்தை ஆராய்கின்ற தற்போதைய அமர்வின் தொனிப்பொருள் காலத்திற்கு
உகந்த பெறுமதியை உரித்தாக்கிக்கொள்கின்றது.
நாடுகளுக்கிடையிலும் நாடுகளுக்குள்ளும்
சமச்சீரற்ற பெறுபேறுகள் காணப்பட்டாலும் அபிவிருத்தி நோக்கங்களை
நிறைவேற்றிக்கொள்ளும் விடயத்தில் பாராட்டக்கூடிய முன்னேற்றத்தைப்
பெற்றுக்கொண்டுள்ளது. உலக வங்கியின் கணிப்பீட்டின் பிரகாரம் 2015ஆம்
ஆண்டளவில் மிக மோசமான வறுமையில் வாழ்கின்ற அபிவிருத்தி அடைகின்ற உலகின்
சனத்தொகையில் சுமார் 40வீத்திற்கு உப சகாரா ஆபிரிக்காவும் தெற்காசியாவும்
இல்லமாக அமைகின்றன.
இப்போக்கு எமது நல்லுணர்வுகளுக்கு தடை
ஏற்படுத்திவிடும். வறிய மக்களின் நிலையை மேம்படுத்த தவறியது ஏன் என்பதை
ஐக்கிய நாடுகள் ஆராய்ந்து அறிய வேண்டும்.இலங்கையை எடுத்துக்கொள்கின்றபோது,
வளர்ச்சியின் பயன்களை மக்கள் தொகையின் அனைத்து பிரிவுகளுக்கிடையிலும்
பகிர்ந்தளித்தல் மற்றும் சமச்சீர்தன்மை, சமூக ரீதியான புறக்கணிப்பு மற்றும்
பாதகமான சூழல் விளைவுகள் என்பவற்றைத் தடுத்தல் எனது நோக்கமாக இருந்தது.
எனது நாடு அடைந்துள்ள சமூக பொருளாதார வெற்றி மக்களை மையமாகக் கொண்ட அரச
கொள்கைகளின் பெறுபேறாகும்.
தலைவர் அவர்களே!
உலகத்தில் மிகவும் கொடூரமான பயங்கரவாத
குழுவுடனான போராட்டம் 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தம், உலக உணவு,
வலுசக்தி, நிதி என்பவற்றின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை
புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றிக்கொண்டிருப்பது
பாராட்டத்தக்கதாகும்.
புள்ளிவிபரங்கள் அதற்கு சாட்சியாக
இருக்கின்றன. இலங்கை 2012ஆம் ஆண்டில் மனித அபிவிருத்தி சுட்டியில் 187
நாடுகளுக்கிடையில் 92வது இடத்தில் இருந்தது. 15.2 % மாக இருந்த கடுமையான
வறுமை ஐந்து ஆண்டுகளின் பின்னர் 2012ஆம் ஆண்டு 6.5% வரை வீழ்ச்சியடைந்தது.
இது புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி நோக்கங்களுக்கான இடைவருட இலக்கை
விஞ்சிச் சென்றதாக அமைகின்றது.
உலக ஆரம்பக்கல்வி நோக்கத்தை 2015ஆம்
ஆண்டளவில் இலகுவாக நிறைவேற்றிக்கொள்ள முடியும். சிசு மரண வீதம் மற்றும்
உயிருள்ள 1000 பிறப்புகளுக்கு 9.4 வரை குறைவடைந்தமை சிறப்புமிக்க நிகழ்வாக
யுனிசெப் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ள சுகாதாரத் துறையில் இலங்கைப் பெற்றுள்ள
வெற்றிகளுக்கிடையில் இதுவும் ஒன்றாகும்.
சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் உலகத்தில்
முதலாவது பெண் பிரதம அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் அரசியல் மற்றும்
சமூக பொருளாதார அபிவிருத்தியில் பெண்கள் நிறைவேற்றுகின்ற தீர்க்கமான கடமைப்
பொறுப்புக்களை முன்கூட்டியே அடையாளம் கண்ட ஒரு நாடாக இலங்கை பெருமிதம்
அடைய முடியும். இலங்கை உலக ஆண் பெண் சமத்துவ சுட்டியில் 16வது இடத்தைப்
பெற்றுக்கொண்டுள்ளது
தலைவர் அவர்களே!
2015ஆம் ஆண்டின் பின்னர் தமது அபிவிருத்தி
நிகழ்ச்சி நிரலில் இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்துள்ள இலங்கை இளம்
சந்ததியினரின் எதிர்பார்ப்புகளை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதில்
முன்னணியில் திகழ்கிறது. இலங்கை 2013 நவம்பர் மாதம் பொதுநலவாய இளைஞர்
இயக்கத்திற்கும் 2014 மே மாதம் ஐக்கிய நாடுகளின் உலக இளைஞர்
மகாநாட்டுக்கும் அனுசரணை அளிக்கிறது.
உலக மகாநாட்டின்போது வாலிபத்தை
நினைவுகூர்வதற்கு ஒன்று சேருங்கள் என அனைவருக்கும் இச்சந்தா்ப்பத்தில் நான்
அழைப்பு விடுக்கின்றேன். இளைஞர்களின் திறன் விருத்தி வறுமையைக்
குறைப்பதற்கு வழிகாட்டுகிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் முகமாக “சர்வதேச திறன்
தினத்தை” பிரகடனப்படுத்தப்படும்படி ஐக்கிய நாடுகளிடம் நான்
கேட்டுக்கொள்கிறேன்.
புதிய சந்ததியினா்வசமுள்ள திறன்களையும்
ஜனநாயகம் தொடர்பான புரிந்துணர்வையும் கூர்மைப்படுத்துவதற்கும்
தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் இளைஞர்
பாராளுமன்றத்தை ஸ்தாபித்தமை ஆக்கப்பூர்வமான அபிவிருத்தியாக இருந்தது.
அங்கத்துவ நாடுகள் புத்தாயிரமாம் ஆண்டின்
அபிவிருத்தி நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும் மார்க்கத்தை தனிப்பட்ட
முறையில் தீர்மானிப்பது மிக முக்கியமானதாகும். இச்செயற்பாடுகளை
திட்டமிடுகின்றபோது அந்தந்த நாடுகளின் தனித்துவமான சமூக கலாசார
பழக்கங்களையும் பாரம்பரியங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தலைவர் அவர்களே
2015ஆம் ஆண்டின் பின்னர் அபிவிருத்தி
ஒழுங்குப்பத்திரத்தைத் தயார்த்தல் றியோ+20 மகாநாட்டின் பெறுபேறுகளுடன்
உடன்பட்ட கோட்பாடுகளுடன் இணைந்த அரசாங்கங்களுக்கிடையிலான செயற்பாடாக இருக்க
வேண்டும். முன்னேற்றமடைந்த பொருளாதாரத்தின் பல நூற்றாண்டுகளின்
அபிவிருத்தி அடைகின்ற உலகின் வளர்ச்சிக்கு சவால் விடுத்து எஞ்சியிருப்பது
குறுகிய காபன் அண்டவெளி மாத்திரமே.
பொருளாதார அபிவிருத்திக்கும் சூழல்
பாதுகாப்புக்குமிடையில் மெல்லிய ரேகையை சமச்சீருடன் பேணுவது எதிர்கால
அபிவிருத்தி கொள்கை தயாரிப்புக்கு பெரும் சவாலாக இருக்கின்றது. ஆகவே
பொதுவான ஆனால் மாறுபட்ட பொறுப்புக்கள் என்ற அடிப்படையில் சூழல் அழிவுக்கு
நட்டஈடு செலுத்துவதன் மூலம் அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது கடப்பாடுகளை
நிறைவேற்றுவது மிகத் தீர்க்கமானதாகும்.
வறுமையை ஒழித்தல் மற்றும் அபிவிருத்தி
அடைகின்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தல் 2015ஆம் ஆண்டின்
பின்னர் அபிவிருத்தி ஒழுங்குப்பத்திரத்தின் முதன்மை நோக்கமாக இருக்க
வேண்டும். நிலைபேறான அபிவிருத்தியூடன் சமூக சமத்துவத்தை
உறுதிப்படுத்துவதற்கு அபிவிருத்தி தொடர்பான சமச்சீரான அணுகுமுறை
அவசியமாகும். உயர் முதலீட்டு வீதங்கள் மனித மூலதனத்தின் பண்பு ரீதியான
பெறுமதி என்பவற்றைப் பலப்படுத்துதல். தொழில்நுட்பத்தை ஒப்படைத்தல்,
நிலைபேறான அபிவிருத்திக்கு தீர்க்கமானதாக அமைகிறது.
றியோ- 20 மகாநாடு அங்கீகாரம்பெற்ற நிதி
தயாரிப்பையும் தொழில்நுட்ப பொறிமுறையையும் துரிதமாக நடைமுறைப்படுத்த
வேண்டும். நிலைபேறான அபிவிருத்தியின் பொருட்டு நிதி தயாரிப்பு மூலோபாயத்தை
தயாரிக்கின்ற போது அபிவிருத்தி அடைகின்ற நாடுகளுக்கு முன்னார் இருந்ததைவிட
அதிகமாகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய நிதி உதவிகளுக்காக வாய்ப்பளிக்க
வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் செயலாளார் நாயகத்தின்
அறிக்கையின் பரிந்துரைகளுக்கமைவாக ஐக்கிய நாடுகளின் கீழ் தொழில்நுட்ப
விஞ்ஞான வசதிகள் பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதற்கு இலங்கை ஒத்துழைப்பை
தெரிவிக்கிறது. உரிமைகளின் அடிப்படையிலான அனுகுமுறைகள்பற்றி உரையாற்றுகின்ற
அதிகாரமுள்ளவர்கள் அபிவிருத்தி அடையும் நிதி தயாரிப்புகளின் பொருட்டுள்ள
தமது சர்வதேச கடப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டும்.
தற்போதைய சர்வதேச நிதி நிறுவனங்களின்
புனரமைப்பதற்கான கோரிக்கைகள் தொடர்ந்தும் செல்லுபடியாகும் நிலையில்
இருக்கின்றன. அவர்களின் முறைசாரா கொள்கைகள் நீண்டகால ரீதியல்
உற்பத்தித்திறன்மிக்கவைகளாக இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
சர்வதேச நிதி மற்றும் நிதியங்களை
தயாரிக்கின்ற நிறுவனங்கள் அபிவிருத்தி அடைகின்ற உலகில் பிரபல்யமான குரல்
எழுப்புவதற்கு இடமளிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அத்துடன்
பொருளாதார ரீதியாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நாடுகள் மேற்குறிப்பிட்ட
நிறுவனங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்தும் தமது பழக்கத்தை கைவிட வேண்டும்.
தற்போது முழுமை பெறாமல் உள்ள உலக பொருளாதார
முறை தொடர்பாக பரிபூரணமான கட்டமைப்பு ரீதியான புனரமைப்பு தற்போதைய
யதார்த்தங்களை முற்று முழுதாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.அபிவிருத்திக்காக
கூட்டுப் பங்காண்மையை மீள அணிதிரட்டும் பொருட்டு நியாயமான சர்வதேச
பொருளாதார முறையொன்று உலகத்திற்கு அவசியமாக இருக்கின்றது.
அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவுகள் உயர்
நிலையில் உள்ள கம்பனிகள் அதில் புதிய பங்காளாக்களாக சேர வேண்டும்.
பொருளாதார அதிகாரம் மாறுவதன் காரணமாக “வடக்கு – தெற்கு ஒத்துழைப்புக்கு”
குறை நிரப்பாக “தெற்கு –தெற்கு ஒத்துழைப்பை” செயலூக்கத்துடன் மேம்படுத்த
வேண்டியது மிக தீர்க்கமானதாகும்.
தலைவர் அவர்கள!
ஒரு சில நாடுகள், பாதுகாப்பை
காரணமாகக்கொண்டும் மனித உரிமைகளின் பாதுகாவலராகவும் தோற்றி அபிவிருத்தி
அடையும் நாடுகளின் உள்முக நடவடிக்கைகளில் தலையிடும் போக்கு
அதிகரித்திருப்பதை சர்வதேச துறைகளில் காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரிய
விடயமாகும். இதன் பெறுபேறாக வன்முறைக்கும் அமைதியின்மைக்கும் அடையாளமாக
இருக்கின்ற பலவந்தமான அரசியல் வேறுபாடுகளுக்கு காரணமாக அமைகின்ற கலவரங்களை
நாம் உலகம் முழுவதிலும் தொடர்ச்சியாக காண்கின்றோம்.
இத்தகைய இயக்கங்கள் மேற்படி நாடுகளில் மிக
நல்ல நிலைப்பாட்டிற்கு காரணமாக இருக்கின்றனவா அல்லது பொருத்தமற்ற புற
காரணிகளினால் வேறுபட்ட பெறுபேறுகளை உருவாக்கியுள்ளனவா என்பதை சிந்தித்து
பார்ப்பதற்கான காலம் வந்துள்ளது. உண்மை யாதெனில் அதற்கு பொறுப்புக்கூற
வேண்டியவர்கள் எதிர்பார்த்த நல்ல பெறுபேறுகள் கிடைக்கவில்லை.
அத்துடன் இந்நாடுகளை நிலையற்ற தாக்குவதற்கு
உண்மையிலேயே பங்களிப்பு செய்துள்ளது என்பதாகும். ஒருதலைப்பட்சமான
குழுக்கள் மற்றும் நடவடிக்கைகள் காரணமாக பாதுகாப்பு சபையின் ஆதிக்கம்
சீர்குலைவுக்கு உள்ளாகாதா?மக்களின் நல்வாழ்வுக்கு சேதம்
ஏற்படுத்தப்பட்டுள்ள துறைகளுக்கு இப்போக்கு பரவியுள்ளதன் காரணமாக அதை
நிறுத்த வேண்டியுள்ளது.
பெரும்பாலும் மாறுபட்ட கலாசாரங்கள்,
விழுமியங்கள்இ வரலாறுகள் என்பவற்றைக் கொண்டுள்ள நாடுகளின் ஒரு வகையிலான
ஜனநாயகத்தை நடத்துவதற்கு மேற்கொள்கின்ற முயற்சியின் காரணமாக இந்த குழப்ப
நிலை உருவாகுகிறது. பல்தரப்பு பங்கேற்புடன் சர்வதேச பாதுகாப்பை உறுதி
செய்வதற்கு குறிப்பாக ஐக்கிய நாடுகள் அதிகாரம் கொடுத்திருந்த போதும் சில
நாடுகளில் இது போன்ற நடவடிக்கை உலகத்திற்கு அவசியமில்லை.
நமது காலத்தில் இப்பங்கேற்பு முழுமையடைய
வேண்டுமானால் அணுவாயுதங்கள் மற்றும் இரசாயன ஆயுதங்களின் தோற்றத்தில் நவீன
விஞ்ஞானம் பகை உணர்வுடன் துஷ்பிரயோகிக்கப்படுவதற்கு எதிராக மனித
வர்க்கத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
தலைவர் அவர்களே!
மத்திய கிழக்கில் வளர்ச்சியடைகின்ற
நிச்சயமற்ற தன்மைகள் மனவேதனையை ஏற்படுத்துகின்றது. 1967ஆம் ஆண்டுக்கு
முன்னர் நாட்டு எல்லையின் அடிப்படையில் பலஸ்தீனத்திற்கும்
இஸ்ரேலுக்குமிடையில் சக சீவனத்தை நாம் ஆசையுடன் எதிர்பார்த்தோம்.
பலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகளின் பூரண அங்கத்துவராக ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை
காத்திருக்கிறது.
மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும்
பொருளாதார சுபீட்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கு ஆபிரிக்க மக்கள் எடுக்கின்ற
முயற்சிக்கு மரியாதை செலுத்துகிறௌம். ஆபிரிக்க மக்கள் தொடார்ந்து சமூக
பொருளாதார வளார்ச்சியை நோக்கிச் செல்கின்ற பயணத்தின்போது இலங்கை
தொடார்ச்சியாக அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் என்பதை தெரிவிக்கிறது.
தலைவர் அவர்களே
நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள்
மற்றும் பொருளாதார தடைகள் போன்ற ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகள் கவலையை
ஏற்படுத்துகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் தனித்துவமாக
இலக்குபடுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரமன்றி எத்தகைய நியாயமும் இல்லாமல்
மனித வர்க்கத்தின் பெருந்தொகையானவர்களுக்கு துன்ப தொல்லைகளை
ஏற்படுத்துகின்றது. பொருளாதார வெற்றி கொள்வதற்கும் பொருளாதார வாய்ப்புகளை
முழுமையாக பெற்றுக்கொள்வதற்கும் மேற்கொள்கின்ற முயற்சிக்காக நான்
மீண்டுமொருமுறை கியூபா மக்களுடன் ஒத்துழைப்புடன் எழுந்து நிற்கின்றேன்.
என்னுடைய நாட்டில் முரண்பாட்டின் பிற்பட்ட
காலப்பகுதியின் அபிவிருத்தியை சுருக்கமாக தெரிவிப்பதற்கு எனக்கு
வாய்ப்பளியுங்கள். மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற பிரிவினைவாத பயங்கரவாதத்தை
முடிவுக்குக் கொண்டுவந்து அபிவிருத்தியுடனும் நல்லிணக்கத்துடனும்
இணைந்துள்ள சிக்கல்களை அணுகுவதில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது என்பதைப்பற்றி
நான் பெருமை அடைகிறேன்.
மக்களின் கருத்தின்மூலம் பிரதிபலிக்கின்ற
முன்னுரிமைகளுக்கு எப்பொழுதும் கூருணர்வுடன் இருக்கின்ற இலங்கை அரசு
இத்துறைகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்திற்காக உரிய அனைத்து
நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
வட மாகாணத்தில் வாழ்கின்ற மக்களுக்கு மாகாண
சபைக்கான தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு
முன்னர் நடைபெற்ற தேர்தலின்போது கிடைத்த சந்தர்ப்பமானது இது தொடர்பான
முக்கியமான நிகழ்வாகும்.
சுமார் கால் நூற்றாண்டின் பின்னர் அதை
செய்யக் கிடைத்தமை எனக்கு சட்டப்பூர்வமான திருப்தியைத் தரும் விடயமாகும்.
அரசியல் அதிகாரமளித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களை
கவனத்தில் எடுத்துக்கொள்கின்றபோது இந்நடவடிக்கையின் தீர்க்கமான
முக்கியத்துவத்தைப்பற்றி சந்தேகம் இருக்க முடியாது.
இலங்கைவாழ் அனைத்து மக்களின் நன்மைக்காக
இம் முயற்சிக்கும் அவற்றின் வெற்றிக்கும் உதவுவதற்கு சர்வதேச சமூகத்திற்கு
தெளிவான பொறுப்பு இருக்கிறது.
தலைவா் அவா்களே!
தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்ற
முன்னேற்றத்தையும் ஐக்கிய நாடுகளின் பொறிமுறையுடன் நிலைபேறான பங்கேற்பையும்
பொருட்படுத்தாமல் இலங்கை மீது காட்டப்படுகின்ற சமச்சீரற்ற
தெரிவிப்பைப்பற்றியும் பல்தரப்பு வரையறையின்மூலம் மேற்கொள்ளப்படுகின்ற
சமநிலையற்ற கவனிப்பையும்பற்றி பெரும்பாலான நாடுகள் ஆச்சரியப்படுகின்றன.
இந்த இடைவெளியில்லாமல் பின் தொடர்கின்ற அடிப்படையும்
கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
பயன்பாட்டுத் தரத்தின் நிலைபேறானத்தன்மையை
சான்றுப்படுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் முறையை துணிச்சலுடன்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அவ்வாறு
செய்கின்றபோது தமது நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக்கொள்வதற்கு அக்கறை
காட்டுகின்ற தரப்பினா; ஐக்கிய நாடுகளின் முறையை முறைகேடாக
பயன்படுத்துகின்றனர் என்பதற்கு சந்தேகம் நிலவுவதற்குள்ள வாய்ப்புகள்
இல்லாமல் போகும்.
அர்ப்பணிப்புடனும் முயற்சியுடனும்
வாழ்க்கையை மிகவும் சவால்மிக்க மற்றும் உண்ணத இலட்சியத்தை வெற்றிகொள்ளும்
சாத்தியம் மனிதனுக்கு இயற்கையாகவே உரித்தாகியுள்ளது. எமது கூட்டு
முயற்சியினால் இந்த பெறுபேறுகள் அனைத்து மனித வர்க்கத்துக்கும்
பயனளிக்குமென நான் நம்புகிறேன். புத்த பெருமானின் போதனையின்படி
“அத்தாகி அத்தனோ நாத்தோ”
“தன் கையே தனக்கு உதவி”
இந்த எக்காலத்தற்கும் உகந்த அறிவுரை உலகத்தின் தலைவிதியை தீர்மானிப்பதற்குப் பயன்பெறுமாக!
மும்மணிகளின் ஆசீர்வாதம் கிட்டுக!
நன்றி-
NH-
No comments:
Post a Comment