
13 வயது தனது மகளை தந்தையொருவர் கர்ப்பமாக்கிய சம்பவமொன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் பிள்ளையின் தாயாரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முக்கு தொடுவாவ பிரதேசத்தில் வதியும்
குறித்த சிறுமி கடந்த 04 மாதங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாகவிருந்த போது
அவரின் தந்தையினால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அந்த
முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளின் நடவடிக்கையில் மாற்றத்தினை அறிந்த தாய், மகளிடம் விசாரித்த போது குறித்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளதினை அறிந்துள்ளார்.
இதே வேளை, வல்லுறவுக்கு உட்படுத்தியமை
தொடர்பில் யாருக்காவது தெரிவித்தால் கொன்று விடுவேன் என தந்தை என்னை
அச்சுறுத்தியமையால் தான் இதுதொடர்பில் யாரிடமும் தெரிவிக்கவில்லை என்று
சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முந்தல் பொலிசார்
மேலதிக விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment