Sunday, October 20, 2013

நள்ளிரவில் தெரியாமல் அறை மாறி மாப்பிள்ளை தோழனுடன் முதலிரவு கொண்டாடிய பெண்...

மெல்பர்ன்:முதலிரவில் தெரியாமல் அறை மாறி சென்ற மணப்பெண், மாப்பிள்ளை தோழனுடன் உறவு கொண்டிருக்கிறார். இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சீனாவின் குவாங்ஸி மாகாணம் நேப்போ கவுன்டியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி வூ என்பவருக்கும் ஹூவாங் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அன்று இரவு மணப்பெண் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு நடந்தது. அப்போது மணமகன் வூ மற்றும் அவரது உறவினர்கள், மாப்பிள்ளை தோழன் ருவான் ஆகியோர் மணப்பெண் வீட்டில் தங்கி இருந்தனர். இரவு அவுட் ஹவுசில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு அறைக்கு சென்றார் மணப்பெண் ஹூவாங்.�

காலையில் கண்விழித்த அவர் பக்கத்தில் படுத்திருந்தவரை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறிக் கொண்டு வெளியில் ஓடினார். அறையில் இருந்தது மாப்பிள்ளை தோழன் ருவான். அதன்பின் மணப்பெண் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. தன்னை ருவான் பலாத்காரம் செய்து விட்டதாக ஹூவான் புகார் கூறினார். பின்னர் வீட்டு பெரியவர்கள் பேசி, தவறுதலாக மணப்பெண்ணுடன் முதலிரவு அன்று உறவு கொண்டதற்காக ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் தர வேண்டும் என்று ருவானிடம் கூறினர். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து போலீசில் மணப்பெண் புகார் கூறினார்.�

ருவானை கைது செய்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம், பலாத்கார குற்றத்தின் கீழ் ருவானுக்கு தண்டனை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தில் பல சந்தேகங்களை பலர் கிளப்பி உள்ளனர். முதலிரவு அன்று மணமகன் எங்கே இருந்தார், �மனைவியை அவர் தேடவில்லையா, மணப்பெண் ஹூவான் சுயநினைவுடன்தான் இருந்தாரா அல்லது மது அருந்திய போதையில் இருந்தாரா, நண்பரின் மனைவி என்று தெரிந்தும் மாப்பிள்ளை தோழன் அவருடன் உறவு கொண்டது எப்படி என்று பல கேள்விகள் எழுப்பி உள்ளனர். இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.�

No comments:

Post a Comment