
நுவரெலியா - கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாடசலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கந்தபளை பொலிஸ் நிலையத்தில் பாடசாலையில் பழைய மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத தெரண கந்தபளை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு வினவியபோது, விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் தொலைபேசி ஊடாக அத தெரண வினவியபோது அதிபர் பதில் அளிக்காது தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக கூறியுள்ளதாகவும் மாணவியின் வீட்டில் அவர் இது குறித்து கதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மாணவி இன்றும் சிறுமியாக இருப்பதோடு ஆசிரியருக்கு 25 வயதிற்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அத தெரண - தமிழ்)
No comments:
Post a Comment