
மூன்றாம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவியான சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டினார் என்ற சந்தேகத்தின் பேரில் 58 வயதான முதியவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹரகமவியிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில்
மலசலக்கூட்டத்தில் வைத்தே தனது அந்தரங்கத்தை காட்டினார் என்ற சந்தேகத்தின்
பேரில் அந்த பாடசாலையின் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஒருவரையே பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பல நாட்களுக்கு முன்னர்
இடம்பெற்றதாகவும் பாடசாலைநிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்தே
பொலிஸில் நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்தனர்
என்றும் சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆண்களுக்கான மலசலக்கூடத்தில்
தான் சிறுநீர் கழித்துகொண்டிருந்த போதே அந்த சிறுமி தனது அந்தரங்க உறுப்பை
பார்த்துவிட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம்
தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment