சர்வதேச சட்டங்கள் நீதி,சமாதானம் என்பவற்றிற்காக அரும்பங்காற்றிய நீதியரசர் கலாநிதி சீ.ஜீ. வீரமந்திரி அவர்களைப் பாராட்டி இடம் பெற்ற வைபவத்தில் விசேட உரையாற்றும் போது அவா இதனைத் தெரிவித்தார்.
கண்டி ஒக்ரேய் ஹோட்டலில் மத்திய மாகாண முஸ்லிம்கள் மற்றும் கண்டி வாழ் புத்தி ஜீவிகளைக் கொண்ட அமைப்பான கண்டி போரம் என்பன இதனை ஒழுங்கு வெய்திருந்தன.
தேரர் மேலும் தெரிவித்ததாவது-
சிங்கள மன்னர்கள் காலம் முதல் இலங்கை ஒரு பல்கலாசார நாடாக இருந்து வந்துள்ளது. அக்காலத்தில் இனங்களுக்கிடையேயும் சமயங்களுக்கிடையேயும் புரிந்துணர்வு காணப்பட்டது.
செனரத் மன்னன் போன்றவர்கள் முஸ்லீம்களை குடியேற்றினான். புதிய முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கினால். அன்று புரிந்துணர்வின் காரணமாக யாரும் அதனைத் தவறாகக் கணிக்க வில்லை.
அன்று காணப்பட்ட அந்த பாரம் பரிய விழுமியங்கள் இன்று குறைந்து கொண்டு வருவதன் காரமாகவே சந்தேகக் கண்கொண்டு ஒருவரை ஒருவர் நோக்கும் தன்மை ஏற்பட்டு வருகிறது என்றார்.
இஸ்லாமிய சரீஹா சட்டங்கள் தொடாபான நூல் ஒன்று உற்பட இன்னும் பல நூல்களை எழுதியுள்ள சர்வதேச சட்டங்கள் கற்கை நிலையத்தின் முக்கிய பதவிகளை வகித்து வருபவருமான நீதியரசர் கலாநிதி சீ.ஜீ.வீரமந்திரி உரையாற்றும் போது தெரிவித்ததாவது-
இஸ்லாமிய சட்டத்துறை தொடர்பான நூல்களை எழுதும் போது எனக்கு சமயங்கள் சார்ந்த சட்டங்களைதத் தேடிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. சட்டங்கள் என்பன நடைமுறைச் சாத்தியம் கொண்டதாக இருக்க வேண்டும். சமயங்கள் தொடர்பான சட்டங்களில் அதனைக் காணமுடிகிறது.
ஆனால் பொதுவான சட்டங்களில் விஞ்ஞான அணுகு முறைகளை மட்டுமே காணமுடியும். ஆனால் சட்டம் அப்படி இருக்க முடியாது. முக்களின் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், விழுமியங்கள் சார்ந்நததாக இருக்கவேண்டும்.
உலகிலுள்ள சகல சமயங்களினது சட்டங்களும் மிகச் செறிவானதும் செழுமையானதுமாகும். தற்போதைய நிலையில் இலங்கை பல்லின சமூக அமைப்பைக் கொண்ட நாடு. பல்லின சமூக கலாச்சாரங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ளாவிட்டால் நாம் எதிர் பார்த்துள்ள சமாதானம் வெகு தூரத்திற்குச் சென்று விடும்.
சமயங்களுக்கிடையே வேறுபாடுகள் காணப் படுவது போலவே சமயங்களுக்கிடையே ஒற்றுமைகளும் காணப் படுகின்றன என்றார்.
பல்கழைக்கழக சட்ட பீடத்தின் பீடாதிபதி கலாநிதி தீபிகா உடகம நளீமியா கலாபீத்தின் தலைவர் கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.மவ்ஜூட் மனித உரிமைகள் ஆய்வலர் திருமதி சுமதி சிவமோகன் உற்பட இன்னும் பலர் உரையாற்றினர்.
இலங்கையிலுள்ள பிரபல சட்டத்தரணிகள், முன்னாள் வெளிநாட்டு தூதுவர்கள், ஓய்வு பெற்ற அரச உயர் அதிகாரிகள், சமூக ஆய்வலர்கள், புத்தி ஜீவிகள், வைத்தியர்கள்.பொறியிலாளர்கள் மற்றும் நிபுணத்துவ துறைசார்ந்தவர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி சட்டத்தரணியும் பிரபல சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எச்.எம். மஹ்றூப் அவர்களால் கண்டி போரத்தின் சார்பாக கலாநிதி வீரமந்திரியைப் பாராட்டி நினைவுச் சின்னம் ஒன்று வழங்கப்பட்டது.










No comments:
Post a Comment