திருமணமான 20 வயது இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஐவர் சிறிமாபோதிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தளம் - சீரம்பியடி பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் ஒரு பிள்ளையின் தாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
குறித்த பெண் தெரிந்தவர் ஒருவருடன் புத்தளம் - பாலாவி பகுதிக்குச் சென்ற போது அப்பகுதியில் உள்ள ஐவர் ஒன்று சேர்ந்து அப்பெண்ணை பெண்ணை காட்டுப் பிரதேசத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிசாரால் கைது செய்யபப்ட்ட சந்தேகநபர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருனகின்றனர்.
No comments:
Post a Comment