Thursday, November 28, 2013

படங்கள் இணைப்பு) மாவனல்லை தெவனகல பிரதேச முஸ்லிம்களை வெளியேற்ற சாகும்வரை உண்ணாவிரதம்


இக்பால் - மாவனல்லை

மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், சட்டவிரோதமாக அங்கு குடியேறி உள்ளவர்கள் ( முஸ்லிம்கள் )அதை ஆக்கிரமித்திருப்பதாகவும், அங்கிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்த (குன்றை சுற்றியுள்ள புனிதபூமிக்கு சொந்தமானதாக சொல்லப்படும் பிரதேசத்தில் இருந்து )  வேண்டும் என்ற இனவாத அமைப்புகளின் இன்னொரு முயற்சி இன்று உண்ணாவிரதம் என்ற பெயரில் மாவனல்லையில் ஆரம்பமாகியுள்ளது.

மாவனல்லை டவுன் பிரதேசத்தில் 9 மணியளவில் தெவனகல சுரகீம ஜாதிக வியாப்பர என்ற அமைப்பு இதனை ஒழுங்கு செய்திருந்தாலும் பின்னணியில் இன்னும் சில அமைப்புகள் பங்குபற்றுவதாக அங்கிருந்து எமக்கு அறியக் கிடைத்தது.

புனித பூமியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேறும் வரை இந்த உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக அவர்கள் அறிவித்து உள்ளதாகவும் குறிப்பிட்ட அமைப்பினர் இன்று பகல் வேலையின் பின்னர் தெவனகல குன்று அமைந்துள்ள பிரதேசத்தில் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிய வருவதுடன் நகரின் பல இடங்களிலும் போலீசார்  விஷேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில் பாங்கு சொல்வதற்கு அச்சுறுத்தல் வந்ததாகவும், ஆனால் பொலிசாரின் பாதுகாப்புடன் இன்று அதான் கூறி ளுகர் தொழுகை நடத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.

சென்ற ஜூலை மாதமும் இது தொடர்பான ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு பொலிசாரால் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இதன் போது விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்

letter

No comments:

Post a Comment