Wednesday, November 27, 2013

கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்க்க வில்லை மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லை ? : தயான் ஜயதிலக்க

அஸ்ரப் ஏ சமத்: உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களை கடந்த 65 வருடங்களாக  இஸ்ரேல் பலஸ்தீனில்  கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது . கெமரூன் ஏன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை  மனித உரிமை பிரச்சினை பற்றி பேசவில்லை ? என்று தயான் ஜயதிலக்க கேள்வியெழுப்பியுள்ளார். படங்கள்
பலஸ்தீன சர்வதேச நட்புரவு தினம் இன்று (27)ஆம் திகதி கொழும்பு 7 ஹெக்டர் கொபேக்கடுவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.  அதில் பிரதம   பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கேள்வி களை முன்வைத்தார் .
மேலும் மேலும் இங்கு உரையாற்றிய தயான் ஜயதிலக்க –
அன்மையில் இலங்கை வந்திருந்த பிரித்தாணிய பிரதமர் கெமரூன் எவ்வித அனுமதியின்றி அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். அங்கு யுத்தத்தம் நடைபெற்ற இடங்கள்,; பாதிக்கப்பட்ட மக்கள், மற்றும் உறவினர்களை இழந்த தாய்மார்களையெல்லாம் சந்தித்து விட்டு கொழும்பு வந்தார். கொழும்பில் தண்னிச்சையான ஊடகவியாளர் மாநாட்டை கூட்டி இலங்கை எதிராக குரல் கொடுத்தார்
. ஆனால் பலஸ்தீனர்கள் கடந்த 65 வருடங்களாக மிகக் கொடுரமான முறையில் கொலைசெய்யப்படுகின்றனா;.
அமெரிக்க, பிரித்தானிய நாடுகளே ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி பலஸ்தீன மக்களை பச்சை பச்சையாக கொலை செய்தனர். பலஸ்தீனத்தில் சிறுபிள்ளைகளையும்
வயோதிபர்களையும் பெண்களையும் கொலைசெய்கின்றனர். அவர்களது அடிப்படைத் தேவைகளை நீர் மற்றும் பாதைகளை கட்டிடங்களையும் குண்டு வைத்து தகார்க்கின்றனர்.
உலகிலேயே மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்கள் கடந்த 65 வருடங்களாக பலஸ்தீனத்தில் இஸ்ரேல் கட்டவிழ்த்து யுத்த வேடிக்கை நடாத்துகின்றது .
இலங்கையில் வடக்கை விட பன் மடங்கு கொடுர சம்பவங்கள் பலஸ்தீனத்தில் நடைபெறுகின்றன. ஆனால் கெமருன் காஸாவுக்குச் சென்று பார்கக்க வில்லை அதற்காக அவர் இஸ்ரேலுக்கு அல்லது  யூதர்களுக்கு  எதிராக மனித உரிமை பிரச்சினை பற்றி
ஏன்  பேசவில்லையென நான் கேள்வி கேட்க விரும்புகின்றேன். என  தயான் ஜயதிலக்க கேள்வி எழுப்பினார்
- மேலும் பீ.பி.சி. சனல் 4 தொலைக்காட்சிகள் ஏன் பலஸ்தீனப் பிரச்சினையை காட்சிகளை தயார்படுத்தி அதனை சர்வதேசத்திற்குச் கொண்டு செல்லவில்லை. எனவும் தயான் கேள்வி எழுப்பினார்
இந் நிகழ்வுக்கு பலஸ்தீன் – இலங்கை நட்புரவு அமைப்பின் இணைத் தலைவர்களான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஸ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்தின,
ஜக்கிய நாடுகள் தூதுவரும் எழுத்தாளருமான கலாநிதி தயான் ஜயதிலக்க, பிரதம அதிதியாக சிரேஸ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ச விதாரண, பலஸ்தீனதீனத் தூதுவர் கலாநிதி அன்வர் அல்-அகா ஆகியோரும் கலந்து கொண்டனர். இலங்கையில் உள்ள 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதுவர்களும்
அத்துடன் பலஸ்தீன நாட்டில் நடைபெறும் இஸ்ரேல  பலஸ்தீன மக்களை கொண்டு குவிக்கும் புகைப்படக் கண் காட்சியும் காண்பிக்கப்பட்டது.
2 1 4 5 6 7 8 9

No comments:

Post a Comment