Thursday, November 7, 2013

கரை தாண்டும் மனைவியும் வேலி தாண்டும் கணவனும் - வெளிநாட்டுப் பயணத்தின் விபரீதம்


 
மத்திய கிழக்கில் மனைவி மைத்துனியை கர்ப்பிணியாக்கிய கணவன்


மனைவி மத்­திய கிழக்கில் பணிப்­பெண்­ணாக வேலை­வாய்ப்பு பெற்றுச் சென்­றதால் தனது இரண்­டரை வயது குழந்­தையைக் கவ­னித்துக் கொள்ள வந்த மனை­வியின் தங்­கை­யான 17 வயது யுவ­தியை கர்ப்­பி­ணி­யாக்­கிய கண­வனை இம்­மாதம் 11ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கும்­படி இறம்­பொ­ட­கல்ல நீதவான் நீதி­மன்ற நீதி­பதி டி.எம்.டி.ஜீ.பண்­டார உத்­த­ர­விட்டார்.

பாண­க­முவ 50 ஏக்கர் என்ற பகு­தியைச் சேர்ந்த 29 வய­தான நப­ரொ­ரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­ட­வ­ராவார்.
சிறுவர் வைத்­திய முகா­முக்கு சகோ­த­ரியின் இரண்­டரை வயது குழந்­தையை எடுத்துச் செல்­லா­தது ஏன் என யுவ­தியின் தாய் கேட்ட போதே யுவதி கர்ப்­ப­முற்­றுள்ள விடயம் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.
தாய் ரிதி­கம பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­ததை அடுத்து சகோ­த­ரியின் கணவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 17 வயது யுவதி பிரசவத்துக்காக குருணாகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தின் தலைவன் கணவனே! மனைவி, பிள்ளைகளை பராமரிக்க கடமைப்பட்டவனும் அவனே! கணவன் உழைக்க கடமைப்பட்டிருக்க வறுமையை சாட்டாக வைத்து மனைவி வெளிநாடு சென்றால் இது போன்ற அவலங்கள் இடம்பெறுவது தவிர்க்க முடியாதவை. மனிதன் மனிதன் வெறும் இரத்தமும் சதையும் மட்டும் கொண்டவனல்ல! உணர்வுகளும் , ஆசைகளும் நிறைந்தவன். தன் படைப்பின் இயல்பை புரியாது நடக்கும் போது இது போன்ற சமூக சீரழிவுகள் ஏற்படவே செய்யும். உணர்வுகளுக்கு தீனி போட உரிய இடம் கிடைக்காத போது தப்பான வழிகளை மனிதன் தேர்வு செய்கிறான். கைது செய்யப்பட்டு கம்பி எண்ணும் சில சாமியார்களும், பிக்குமார்களும், அருட் தந்தைகளும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு!

தீர்வு என்ன?

இஸ்லாத்தை வேண்டி நிற்கும் இலங்கை!

1) உரியவா் பொருப்பை உரியவர் செய்தல் வேண்டும்.

இது போன் அவலங்கள் தடுக்கப்பட வேண்டுமாயின் குடும்பப் பொருப்பை கணவன் சுமக்க வேண்டும்.

“ஆண்களே பெண்களின் நிர்வாகிகள்! இறைவன் சிலரை விட சிலரை சிறப்பித்து வைத்துள்ளான். கணவன் தன் பொருளாதாரத்திலிருந்து மனைவி்க்கு செலவு செய்வதே இதற்கான காரணமாகும் என திருக்குர்ஆன் போதிக்கிறது.

கணவனின் உழைக்கும் பொருப்பை மனைவி கையிலெடுத்தால் நாளைய எதிர்காலத் தலைவர்களாய் உருவாக்கப்பட வேண்டிய பிள்ளைகள் தருதலைகளாக மாறிவிடுவர். 

2)ஆணும் பெண்ணும் சந்திக்கும் தனிமை தவிர்க்கப்பட வேண்டும்.

மைத்துனியானாலும் அவள் மனைவி அல்ல! அன்னியப் பெண்ணே! பஞ்சையும் நெருப்பையும் அருகில் வைத்தால் அது தீப்பற்றவே செய்யும்.  எனவே தான் இஸ்லாம் தனிமையை தடுக்கிறது.

“ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம்.மூன்றாவது நபராக சாத்தான் இருக்கிறான்.“ 

3)வெளிநாட்டுப்பயணம் தடுக்கப்பட வேண்டும்.

கணவனும் மனைவியும் கடல் கடந்து பிரிந்திருக்கும் போது உணர்வுகள் கொப்பளித்தால் எந்த வடிகாலை தேடுவது? தக்க சமயத்தில் உணர்வுகளுக்கு வடிகால் கிடைக்காத போது தப்பான வழிகளில் அதன தீர்த்துக்கொள்ள முனைவது தவிர்க்க முடியாதது. எனவே தான் இஸ்லாம் இப்படி பகர்கிறது.

“இறைவன் துறவரத்தை ஒருபோதும் அவர்கள் மீது விதிக்க வில்லை!“

“உங்களில் ஒருவர் ஒரு அன்னியப் பெண்ணை கண்டு இச்சை கொண்டு விட்டால் உடனடியாக தன் மனைவியிடம் செல்லட்டும். அவளிடம் எது உள்ளதோ அதுவே உன் மனைவியிடமும் உள்ளது.“

மனைவியே பக்கத்தில் இல்லாவிட்டால் தப்பு நடப்பது சொல்லவா வேண்டும்.

4) பலதார மணத்திற்கான அனுமதி

ஒரு மனைவியுடன் திருப்தி படாத ஆண்களாய் இருந்தால் அவர்கள் தப்பான வழியில் சென்றுவிடாமல் இருப்பதற்காகவும், குறிப்பிட்ட பெண் பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காகவும் தம் மனைவியர் இடையே நீதி செலுத்த முடியும் என்று ஒரு கணவன் கருதும் பட்சத்தில் பலதார மணத்தை செய்யுமாறு இஸ்லாம் அனுமதி அளி்க்கிறது. அப்போது தான் குறிப்பிட்ட பெண்ணுக்கான சொத்துரிமை, ஜீவனாம்சம், அப்பெண்ணின் கருவில் உருவாகும் குழந்தைக்கான தந்தை என்ற பாதுகாப்பு, உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க முடியும்.  

5) வேலி தாண்டினால் கல்லெறிந்து கொள்ளுங்கள்!

தன் உணர்வுகளுக்கு வடிகாலை 4 மனைவியர் வரை வைத்துக்கொள்ளலாம் என்ற அனுமதிக்குப் பின்னரும் எவன் வேலி தாண்டுகிறானோ அவன் ஆரோக்கியமான சமூக அமைப்பை அசிங்கப்படுத்துகிறான். ஆதலால் அவன் உயிர் வாழ்வதற்கே தகுதியற்றவன். நடுவில் வளரும் களைகளை அகற்றினால் தான் நாடு உருப்படும்.  எனவே இது போன்றவர்களை கொல்லுமாறு இஸ்லாம் பனிக்கிறது.

இஸ்லாம் கூறும் போதனைகளை பின்பற்றினால் இந்நாடு நந்தவனமாக நறுமணம் கமலும்!


No comments:

Post a Comment