Tuesday, November 26, 2013

திருமணமாகி 3 மாதமே ஆன மனைவியின் ஹேண்ட் பேக்கில் சிகரெட். அதிர்ச்சி அடைந்த சவுதி கணவர் விவாகரத்து.(saudi)

சில தினங்களுக்கு முன்பு தனது மனைவியின் ஹேண்ட் பேக்கை அவருக்கு தெரியாமல் எடுத்து ஆராய்ந்து பார்த்தார். அதில் சிகரெட் பெட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். பின்னர் உடனடியாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து அப்பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில்,..அவரது பையில் சிகரெட் இருந்ததற்காக விவாகரத்து கேட்டுள்ளார்.

உண்மையில் அந்த பெண்ணின் தரப்பு நியாயத்தை தெரிவிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

http://timesofindia.indiatimes.com/world/mad-mad-world/Saudi-man-finds-cigarette-in-wifes-bag-divorces-her/articleshow/26367142.cms


இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், சவுதியில் இளம்பெண்கள் மத்தியில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கல்லூரி செல்லும் பெண்களில் 8 லட்சம் பேர் சிகரெட் பிடிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சவுதியில் மொத்தம் 60 லட்சம் பேருக்கு சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளது அதில் 6 லட்சம் பெண்களுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த விகிதம் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்றனர்.

கடந்த ஆண்டு இதே பிரச்னைக்காக பெண் ஒருவர் தனது புகை பிடிக்கும் பழக்கம் உள்ள கணவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment