Tuesday, November 26, 2013

உலக சந்தையில் மசகெண்ணை விலை வீழ்ச்சியால் இலங்கையில் விலை உயர்த்த அவசியமில்லை

உலக சந்தையில் மசகெண்ணை விலை வீழ்ச்சியால் இலங்கையில் விலை உயர்த்த அவசியமில்லை


பெற்றோலிய கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்படும் எரிபொருளின் விலையை உயர்த்துவதற்கான அவசியம் இல்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கு காரணம் உலக சந்தையில் மசகெண்ணையின் விலை குறைந்துள்ளமையாகும்.

உலக சந்தையில் மசகெண்ணை ஒரு பெரலின் விலை நேற்றைய தினம் 94 அமெரிக்க டொலர் வரை குறைந்துள்ளதென கூறப்படுகிறது.

கடந்த மாதம் அதன் விலை 106 அமெரிக்க டொலராகவும் பெப்ரவரி மாதத்தில் 111 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது.

ஈரானுடனான அமெரிக்க பிரச்சினை சுமூக நிலையை நோக்கி நகர்வதால் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய விடுக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய முடிந்தால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை சரிவரச் செய்ய முடியும்.

அதனால் வரி அதிகரிப்பின் பின் எரிபொருள் விலை அதிகரிப்பில் இருந்து பொது மக்கள் தப்பித்துக் கொள்ள முடியும்.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment