Wednesday, November 27, 2013

சிரியாவில் பெண்கள் பாலியல் துன்புருத்தல்!


கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிரியாவில் வன்செயல் சம்பவங்கள் ஆரம்பமான காலம் முதல் அரசாங்க மற்றும் ஆயுத குழுக்களினால் பாரிய அளவில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக மெடிட்டேரியன் மனித உரிமைகளை பேணும் வலையமைப்பு தெரிவித்துள்ளது.
வன்செயல் காரணமாக பெண்கள் அடிக்கடி இடம்பெயரும் போது, திட்டமிட்டப்படி அரச மற்றும் ஆயுத குழுக்களினால் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு கொடூரமாக உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல்களை, பாதிப்படைந்த பெண்கள் பாதிக்கபட்ட நிலையிலேயே வேதனையுடன் மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த பாலியல் வல்லுறவு குறித்து முறையிட்ட பல பெண்கள் காணமல் போயுள்ளதுடன், பாரிய அளவில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அச்சம் காரணமாக இவை குறித்த தகவல்கள் வெளியுலகத்திற்கு அதிகளவில் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment