Thursday, October 10, 2013

உங்கள் தோழி அடிக்கடி ஸாரி சொல்றாங்களா? அப்ப உங்களை லவ் பண்றாங்க!


தோழியா? என் காதலியா? யாரடி நீ கண்ணே… என்று சில ஆண்கள் குழம்பித்தான் போவார்கள். சிறுவயது முதல் பழகிய தோழியின் மேல் திடீரென்று காதல் பூத்திருக்கும். அதை சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வாள்? ஒருவேளை வெறுத்துவிடுவாளோ என்று அச்சம் தலைதூக்கும்.
உங்கள் தோழியும் உங்களை நேசிக்கிறாளா? உங்களின் நட்பு அடுத்த கட்டத்தை அடைந்துள்ளதா? என்பதை தெரிந்து சில அறிகுறிகள் உண்டு. இதேபோல் உங்கள் தோழியும் உங்களிடம் நடந்து கொள்கிறாள் என்றால் நிச்சயம் அவளும் உங்களை நேசிக்கிறாள். ஆனால் ஏதோ காரணத்திற்காக காதலை வெளிக்காட்டாமல் மூடி வைக்கின்றாள். காலமறிந்து அந்த காதலை வெளியே கொண்டு வாருங்களேன்.
அடிக்கடி பரிசு
பிறந்தநாள், சந்தித்தநாள், ஏதோ ஒருநாளை சாக்காக வைத்து அடிக்கடி பரிசுப் பொருளுடன் உங்களை உங்கள் தோழி சந்திக்கிறாளா? அப்படி எனில் உங்களிடம் அவளைப்பற்றிய நினைவுகள் அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கிறாள். நட்பை தாண்டிய பரிசுப்பொருளாக அவள் கொடுக்கிறாளா? என்று கவனிக்கவும்.
உங்களுடன் அதிக நேரம்
முன்பெல்லாம் அரிதாகத்தான் உங்கள் சந்திப்பு நிகழும். ஆனால் இப்பொழுது அடிக்கடி திட்டமிட்டு உங்களை சந்திக்கிறாளா? ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி உங்களுடன் அதிக நேரத்தை செலவிடுகிறாளா? என்று கவனிக்கவும்.
அதீத அக்கறை
ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களை அதிகம் சிரமத்திற்குள்ளாக்காமல் வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாளா?. சின்ன விசயத்திற்கு கூட சந்தேகம் கேட்கும் சாக்கில் உங்களிடம் வந்து பேசுகிறாளா? உங்கள் மீது அன்பு அதிகரித்துவிட்டது.
சந்தோச நினைவுகள்
நீங்கள் முதலில் சந்தித்த இடத்திற்கு உங்களை திடீரென அழைத்துச் சென்று பரிசளிக்கலாம். அப்போது அன்றைய நாளைப் பற்றி கண்களின் மகிழ்ச்சி மின்ன பேசுகிறாரா? அப்போ கண்டிப்பாக அதுதான்.
சின்னச் சின்ன சர்ப்ரைஸ்
உங்கள் தோழி அடிக்கடி ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்கிறாரா? உங்களை தொட்டுப் பேசுவது. அடிக்கடி எஸ்.எம்.எஸ், மெயில் அனுப்பது என ஏதாவது சந்தோச சர்ப்ரைஸ் தருகிறாரா? அப்போது அவருக்கு நட்பைத் தாண்டி காதல் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
அடிக்கடி மன்னிப்பு கேட்கிறாரா?
சின்னச் சின்ன விசயங்களுக்கு எல்லாம் அடிக்கடி வந்து மன்னிப்பு கேட்கிறாரா? அசடு வழிகிறரா? செல்லக்கோபம், செல்லச்சண்டைகள் போட்டு பின்னர் தானாக வந்து மன்னிப்பு கேட்கிறரா? அப்போ புரிஞ்சிக்கங்க பாஸ். அவங்க உங்களை லவ் பண்றாங்க.
எப்படி சொல்லலாம்?
உங்களை அவர் நேசிக்கிறார் என்று தெரிந்த உடன் உடனே நீங்கள் காதலை வெளிப்படுத்த வேண்டாம். யாரும் தொந்தரவு செய்யாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சந்தோச செய்தியை தெரிவியுங்கள்.
அழகாய் எழுதுங்களேன்
சிலர் முகம் பார்த்து பேச கூச்சப்படுவார்கள். எனவே பேசாமல் கடிதம் எழுதுங்கள். மெயில், லெட்டர் என எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. தெளிவாக பேச வேண்டியதை ரொமான்ஸ் உணர்வுகளுடன் எழுதுங்கள். உங்கள் காதலை தெளிவாக புரியவையுங்கள்.
கவனம் முழுவதும் அவர் மீதுதான்
உங்கள் காதலை அவர் ஏற்றுக்கொண்டார் என்றால் உடனே அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடவேண்டாம். அடிக்கடி அவரை கவனியுங்கள். அவ்வப்போது மெசேஜ், மெயில் தட்டிவிடுங்கள். காதலை சொல்லும் வரை அதீத அக்கறை எடுத்துக்கொண்டுவிட்டு அப்புறம் கண்டுகொள்ளாமல் விடுவது சிக்கலில் கொண்டுபோய்விடும்.
எனவே உங்கள் காதலியின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுங்கள். அப்பொழுதுதான் உங்கள் காதல் எந்த வித சிக்கலும் இல்லாமல் வெற்றி பெறும்.

No comments:

Post a Comment