
மொபைல் வாங்க முடிவெடுத்ததும் ஆன்லைனில்
வீட்டில் இருந்துகொண்டே ஆர்டர் செய்து செல்போனை பெற
முயற்சிக்காதீர்கள்(Avoid Online shopping). இது சில வேளைகளில் உங்களை தர்ம
சங்கடத்தில் ஆழ்த்திவிடும். நேரடியாக நீங்களே செல்போன் கடைக்குச் சென்று
வாங்குவதுதான் சிறந்த வழி.
நீங்கள் உங்களுடைய பழைய போனை மாற்றி,
புதிய போனை வாங்குவதென முடிவெடுத்துவிட்டால், அங்குள்ள எங்சேன்ஜ் ஆஃபர்
(Exchange Offer)பற்றி நன்றாகத்தெரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய போனுக்கு
அவர்கள் கொடுக்கும் விலை சரிதானா என நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். சில
கடைகளில் மிக குறைந்த விலையே பழைய போனுக்கு (Old cellphone) தருவார்கள்.
அப்படிப்பட்ட கடைகளில் உங்கள் பழைய செல்போனுக்குரிய விலையை பேரம்
பேசிப்பாருங்கள். பேரம் பேசுவதில் கூச்சமே கூடாது. ஏனென்றால் இது உங்களுடைய
போன். இதனால் உங்களுக்கு ஒரு நூறுகள் கிடைத்தால் கூட இலாபம்தானே..
செல்போனில் உள்ள மற்ற கண்ணுக்குத்
தெரியாத வசதிகளை விட அடிக்கடி உபயோகிக்கும் பட்டன்கள் முக்கியம். தரமான
keypad உள்ள செல்போனை தெரிவு செய்வது நல்லது.
செல்போன் வாங்கியவுடனேயே சிம்கார்டை
போட்டு பேசிப்பாருங்கள். வீடியோ, கேமரா, டிஸ்பிளே (Video, camera, Display)
என பல வசதிகளையும் பார்ப்பதோடு இதையும் சோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் பேசுவதற்கும், கேட்பதற்கும் செல்போன் முக்கியமாக உங்களுக்குத்
தேவை என்பதை நினைவில் வையுங்கள். எதிர்முனையிலிருந்து பேசுவது தெளிவாக,
சப்தமாக கேட்கமுடிகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
செல்போன் அடிக்கடி
பயன்படுத்துபவர்களெனில் மற்ற வசதிகளைவிட ஒலி வாங்கி (mike), ஸ்பீக்கர்
(speaker) போன்றவைகள் சிறந்த்தாக உள்ள அம்பாசிடர் மாடல் (ambassador model
phones) போன்களை வாங்குவது சிறந்தது. காரணம் அதிக சென்சிடிவ் டைப் போன்கள்
அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும்போது பழுதடையும் வாய்ப்புகள் அதிகம்.
அம்பாசிடர் வகை போன்கள் அதிகநாள் உழைக்க கூடியது.
நீங்கள் வாங்கும் மொபைல் காஸ்ட்லி
ஐட்டமாக (costly phone items) இருப்பின் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள்.
உங்களது விருப்பங்களை அந்த போன் அனைத்து வகையிலும் பூர்த்தி செய்கிறதா
என்பதை ஒன்றுக்கு பத்துமுறை நன்றாக பார்த்து, முடிவெடுத்து பிறகு
வாங்குங்கள். வாங்கிய காஸ்ட்லி போனுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும்
செய்துகொள்ளுங்கள். குறிப்பாக Mobile Insurance செய்துவிடுங்கள். இதனால்
உங்களுடைய போன் திருடு போனாலோ அல்லது தீ, மழை, விபத்துப் போன்றவற்றால்
சேதம் அடைந்தாலோ மீண்டும் அந்தப் போனுக்குரிய தொகையை பெறுவதற்கு பயன்படும்
கவர்ச்சிகரமானதாக உள்ள சீனா போன்
மாடல்களைத் (china phone models) தவிர்த்துவிடுங்கள். அதிக கவர்ச்சி உள்ள
அளவிற்கு அதில் ஆபத்தும் அதிகம். அதில் உள்ள ஆன்டெனா வழியாக ரேடியேஷன்கள்
(high Radiation) அதிகமாக உள்வாங்கப்படும். இந்த அதிகளவு ரேடியேசன்களால்
உடலுக்கு கேடு உருவாகும். விலைகொடுத்து நோயை வாங்க வேண்டாமே..!
மொபைல் போனுக்கு பேட்டரி லைப் (battery
backup) ரொம்ப முக்கியம். அதிக நேரம் பேட்டரி நிலைத்திருக்கும் போன்களையே
கேட்டு வாங்குங்கள். அடிக்கடி பேட்டரி தீருவதால் தேவையில்லாத “டென்சன்”
உருவாகும். முக்கியமான நேரங்களில் “பேட்டரி லோ” காட்டி உங்களை எரிச்சலைடய
வைக்கும்.
மற்ற வசதிகளைப் பற்றி மொபைல் கடையிலேயே
விலாவரியாக சொல்வார்கள். செல்போனுக்கு தேவையான முக்கியமான அடிப்படை
வசதிகளைத் தவிர, மற்ற கவர்ச்சிகரமான விஷயங்களை முன்னிறுத்தி கடைக்காரர்கள்
சொல்வார்கள். அது வியாபார யுக்தி. பணம் கொடுத்து வாங்கும் நாம்தான்
எச்சரிக்கையுடன் இருந்து நமக்குப் பிடித்தமான, பொருத்தமான போனை வாங்க
வேண்டும்.
..முத்தமிழன்.
No comments:
Post a Comment