Thursday, October 10, 2013

ஓர் இஸ்லாமிய வாரிசை தன் வயிற்றில் சுமந்ததால் பரிதாபமாகக் கொல்லப்பட்டார் இளவரசி டயானா!

லண்டன்: இங்கிலாந்து  இளவரசி டயானா தனது காதலருடன் காரி


ல் பயணம் செய்த போது, பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேகமாகச் சென்றபோது விபத்தில் சிக்கி பரிதாபமாகப் பலியானார் என்றுதான் உலகம் நம்பிக்கொண்டிருந்தது.

அவரது மரணம் குறித்து இன்னும் மர்மம் விலகாத நிலையில், தொடர்ந்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், சமீபத்தில் டயானாவின் மரணம் குறித்து வெளிவந்துள்ள புத்தகத்தில் விபத்தில் சிக்கிய போது டயானா கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அலன் பவர் என்பவர் டயானாவின் மர்ம மரணம் தொடர்பாக புதிய புத்தகம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், விபத்தில் சிக்கிய டயானாவை பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தபோது அவரது வயிற்றை ‘எக்ஸ்-ரே’ எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாகவும், இத்தகவல் ஆஸ்பத்திரி குறிப்பேடுகளில் பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்றவே M-16 உளவாளிகளை ஏவி இங்கிலாந்து அரண்மனை டயானாவைக் கௌரவக்கொலை செய்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கர்ப்பமாக இருந்த டயானாவின் வயிறு வெளியே தெரியாதபடி, டயானாவின் பிணத்தை தைலத்தில் போட்டு டோடி ஃபயீத்தின் குழந்தை அவரது கருவில் வளரும் ரகசியத்தை இங்கிலாந்து அரச வம்சத்தினர் மறைத்து விட்டதாகவும் அலன் பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஓர் ஆங்கில அரச பரம்பரையில் ஓர் இஸ்லாமிய வாரிசா? என்ற திணரல் அரண்மணைக்குள் இருந்த வந்தது. டோடியும் டயானாவும் திருமணம் நிச்சயிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னரே இவ்விபத்து ஏற்பட்டிருந்தது.
 
டயானாவையும், டோடியையும் கொல்வதற்காக சினைப்பர் துப்பாக்கிகள் கொண்ட M-16 உளவாளிகள் ஏற்கனவே பல முறை பயிற்சி எடுத்துவந்த புகைப்படமொன்றையும் தற்பொழுது இந்த இரகசியத்தை வெளியில் கொண்டுவந்திருக்கும் குறித்த நபரால் வெளியிடப்பட்டிருக்கிறது.
டயானாவின் மரணத்தின் மர்மம் ஓர் தொடர்கதையாக இருந்து வருகின்றது. ஒருவேளை அவர் இஸ்லாத்தை ஏற்றிருந்தாரா என்றும் விரைவில் இதன் இரகசியங்கள் வெளிவரலாம் என அரச பரம்பறை தற்பொழுது திணறிப்போய் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment