Tuesday, October 1, 2013

சிறுமியுடன் குடும்பம் நடத்திய சிறுவன் கைது!


சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச் சாலையை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது சிறுவன் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் எனத் தெரியவந்துள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
சாலியவெவ, கலவெவ பகுதியில் உள்ள சிற்றுண்டிச்சாலையொன்றை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டான்.
அச்சிறுவன் வழங்கிய வாக்கு மூலத்தில் தனது தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும் தந்தை மற்றும் தங்கையுடன் வீட்டில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இதேநேரம் அவ்வீட்டில் மற்றுமொரு சிறுமியும் வசித்ததாகத் தெரியவந்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது அச்சிறுமி 14 வயதானவர் என்றும் மேற்படி சந்தேகநபர் அச்சிறுமியுடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த இருவரையும் கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment