
23வது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் நவம்பர்
மாதம் 10ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை இலங்கையின் தலைநகர் கொழும்பில்
இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மிகவும்
தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மாநாட்டுக்கு பொதுநலவாய
அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் வருவார்களா? என்ற கேள்வி
எழுந்துள்ளது. காரணம் சர்வதேசத்தில் இலங்கை மீது சுமத்தப்பட்டுவரும் மனித
உரிமை மீறல் குற்றச்சாட்டாகும். மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு இலங்கை
இன்னும் பொறுப்பான பதில் அளிக்காததால் மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக கனடா
ஏற்கனவே அறிவித்துள்ளது. இம்முறை மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என
பிரித்தானிய மகாராணியும் முதல் முறையாக அறிவித்துவிட்டார்.
பிரித்தானியா,
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் வருகையை உறுதி
செய்துள்ளன. ஆனால் இந்தியாவின் முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இலங்கை
விடயத்தில் இந்தியா காத்திரமான பங்கை அளித்து வருவதால் இந்தியாவின் முடிவை
உலக நாடுகள் எதிர்பார்த்துள்ளன. பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ்
கூட்டணி தரப்பே கோரிக்கை முன்வைத்துள்ளது. அதுமட்டுமல்லாது தமிழகத்தின்
அதிமுக, திமுக, மதிமுக, பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை
எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தியாவில் விரைவில் லோக்சபா
தேர்தல் வரவுள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமாயின் கூட்டணி
கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இன்றியமையாததாகும். இந்நிலையில்
கூட்டணி கட்சிகளை பகைத்துக் கொண்டு மன்மோகன் சிங் இலங்கை வருவாரா? அவர்
இலங்கை வராவிட்டால் இலங்கைக்கு சர்வதேசத்தில் கிடைக்கும் வரவேட்பு என்ன?
உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கருத்து வெளியீட்டு சுதந்திரத்தை உறுதி
செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment