
ஐரோப்பாவின் மிதக்கும் நகரமான வெனிஸ் ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு மூழ்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஜரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு.
இந்நகரம் முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் கால்வாய்களே முக்கிய போக்குவரத்தாக திகழ்கின்றன.
இந்நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதாவது ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு நகரம் மூழ்குவதை செயற்கைகோளின் உதவியுடன் விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மனித நடவடிக்கைகளால் இந்த நகரம் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 2 முதல் 10 மி.மீ வரை மூழ்கி வரும்போது, இயற்கையாகவும் ஆண்டுதோறும் 0.8 லிருந்து 1 மி.மீ வரை மூழ்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கெனவே ஆண்டிற்கு நான்கு முறை அதிகரித்துவரும் நீர்மட்டத்தால் நகருக்கு ஏற்படும் ஆபத்து குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அருகில் உள்ள கடல்நீரின் மட்டம் உயருவது வெனிஸ் நகரத்தைப் பாதிக்கும் என்பதால் இதுகுறித்த தொடர் கண்காணிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இத்தாலியின் படுவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான பியட்ரோ டீட்டினி தெரிவித்தார்.
முதலாவது செயற்கைக்கோள் மூலம் மாதம் ஒருமுறை அறிக்கைகள் தயார் செய்தும், இரண்டாவது நவீன செயற்கைக்கோள் மூலம் பத்து நாட்களுக்கு ஒருமுறை நீர்மட்டம் குறித்த தகவல்களையும் பெறுகின்றனர்.

No comments:
Post a Comment