இலங்கையில் காமன்வெல்த் உச்சி மாநாடு நடைபெற உள்ள சூழலில், கடந்த ஆண்டு
இலங்கையின் பிரதம நீதிபதி ஷிராணி பண்டாரநாயக மீது பாராளுமன்றத்தில் குற்றம்
சுமத்தி பதவி இறக்கம் செய்த வழிமுறை இலங்கையின் அரசியல் சட்டத்துக்கு
முரணானது, மற்றும் காமன்வெல்த் விழுமியங்களுக்கும் முரணானது என்று
காமன்வெல்த் நாடுகள் அமைப்பால் சட்டக் கருத்து வழங்கிய பிரிட்டிஷ்
வழக்கறிஞர், ஜியாப்ரி ஜோவெல், தனது அறிக்கையில் கூறியிருப்பதாக, இணைய
தளமொன்றில் செய்தி கசிந்திருக்கிறது.
இந்த அறிக்கையை காமன்வெல்த் அமைப்பின் தலைமைச் செயலரான கமலேஷ் சர்மா
காமன்வெல்த்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு தராமல் மறைத்துவிட்டார்
என்று முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், காமன்வெல்த்தின் தகவல் தொடர்பாளரான ரிச்சர்ட் உக்கு இது குறித்து
முன்னர் கேட்டபோது, அந்த அறிக்கை அமைப்பின் தலைமைச் செயலாளருக்கு
மாத்திரமானது என்றும் அதனை ஏனைய தலைவர்களுக்கு அவர் காண்பிக்க வேண்டிய
அவசியமில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இணையதளத்தில் கசிந்திருக்கும் அந்த அறிக்கை குறித்து
உக்குவிடம் மீண்டும் கேட்டபோது, தமது நடவடிக்கைகளை ஒரு அமைதியான
இராஜத்ந்திர நடவடிக்கை என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment