Thursday, October 31, 2013

8 லட்சத்துக்கும் மேற்பட்ட சிங்கள பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளனர்


8 லட்சத்து 90 ஆயிரம் சிங்கள பெண்கள் நாடு முழுவதும் அமைந்துள்ள கருக்கலைப்பு மையங்களில் கருக்கலைப்பு செய்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்புக்கும் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தேரர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள பௌத்த மக்களின் இனப் பெருக்க வேகத்தை குறைக்கும் நோக்கில் சில வைத்தியசாலைகளை தளமாக கொண்டு இந்த கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புள்ளிவிபரங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. சில கிராமங்களில் வறிய குடும்பங்களை சேர்ந்த இளம் வயது பெண்கள் அச்சுறுத்தப்பட்டு கருக்கலைப்பு இணங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த நாடு ஒரு காலத்தில் சிங்கள இனத்திற்கு இல்லாமல் போகும் நேரத்தில் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்.
இதனால் இது சம்பந்தமாக சுகாதார அமைச்சர் முக்கிய கவனம் செலுத்தி சட்டவிரோத கருக்கலைப்பு மையங்களை உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதிகரிப்பின் பின்னரான புதிய பஸ் கட்டண விபரம் இதோ!

தனியார் மற்றும் இபோச பஸ் கட்டணங்கள் இன்று (01) தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

7% பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகக்குறைந்த 9 ரூபா கட்டணத்தை தவிர ஏனைய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஒரு ரூபா தொடக்கம் 46 ரூபா வரை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

புதிய அதிகரிப்பின் பின்னரான கட்டண விபரம் இதோ...

12 - 27 ரூபாவரை 01 ரூபா அதிகரிப்பு
30 - 32 ரூபாவரை 02 ரூபா அதிகரிப்பு
34 - 48 ரூபாவரை 03 ரூபா அதிகரிப்பு
49 - 60 ரூபாவரை 04 ரூபா அதிகரிப்பு
62 - 75 ரூபாவரை 05 ரூபா அதிகரிப்பு
77 - 105 ரூபாவரை 07 அதிகரிப்பு
107 - 117 ரூபாவரை 08 ரூபா அதிகரிப்பு
118 - 142 ரூபாவரை 09 ரூபா அதிகரிப்பு
143 - 151 ரூபாவரை 10 ரூபா அதிகரிப்பு
152 - 160 ரூபாவரை 11 ரூபா அதிகரிப்பு
161 - 175 ரூபாவரை 12 ரூபா அதிகரிப்பு
177 - 186 ரூபாவரை 13 ரூபா அதிகரிப்பு
187 - 198 ரூபாவரை 14 ரூபா அதிகரிப்பு
சாதாரண பஸ்களில் 662 ரூபா என்ற அதி கூடிய கட்டணம் 46 ரூபாவால் அதிகரிப்பு
தெற்கு அதிவேக வீதியில் மஹரகம தொடக்கம் காலி வரை 500 ரூபா