Monday, November 27, 2017

டிக்வெல்லவின் ஆட்டமிழப்பை மைதானத்தில் நடனமாடி கொண்டாடிய கோஹ்லி!!! (காணொளி இணைப்பு

இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகின்றது.
இதன்போது இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, வித்தியாசமான முறையில் டிக்வெல்லவின் ஆட்டமிழப்பை கொண்டாடியுள்ளார். “சிலிப்” திசையில் களத்தடுப்பில் ஈடுபட்ட கோஹ்லி, நடனமாடியவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதில் இலங்கை அணியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடிய நிரோஷன் டிக்வெல்ல 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, ஜடேஜாவின் பந்து வீச்சில் இசான் சர்மாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
விராட் கோஹ்லி இவ்வாறு நடனமாடியுள்ள காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விராட் கோஹ்லி நடனமாடிய காணொளி இதோ…!

No comments:

Post a Comment