ஒரு கட்டுரையில் அவரை தாறுமாறாக விமர்சிப்போர் கூட இன்னொரு கட்டுரையில் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள் .
இதை பல சந்தர்ப்பங்களில் வாசித்ததுண்டு.
அப்படியொரு புரியாத புதிர் . வெற்றியா ? தோல்வியா ? ஆட்சி கை நழுவுமா ? எதைப்பற்றியும் மனிதர் அலட்ட மாட்டார்.
அதனால் தானோ என்னவோ 22 தேர்தல்களில் தோல்வியடைந்தும் அலட்டாமல் தலைமைத்துவத்தில் உறுதியாகவே இருந்தார்.
2015 ஜனாதிபதி மாற்றத்தின் பின் இடைக்கால அரசாங்கத்தில் குறைந்த உறுப்பினர்களை வைத்துக்கொண்டே பிரதமராகி சாதனையும் புரிந்தார்
நாடே கூடி நின்று விமர்சித்தாலும் அவர் அதையெல்லாம் கணக்கெடுப்பதில்லை.
ஒரு அரசியல்வாதிக்கு விமர்சணம் என்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால் அதிலே அவன் நல்லதையும் , கெட்டதையும் பிரித்து எடுக்க வேண்டும் . தவறுகளை திருத்தல் வேண்டும் ஆனால் இவருக்கு எதுவுமே பொருட்டல்ல.
இவர் பெரிதாக யாரின் ஆலோசணைகளையும் கேட்பதில்லை , ஏனெனில் இவர் பல சர்வதேச அமைப்புக்களின் , நாடுகளின் ஆலோசணை சபைகளிலும் இருப்பதாலோ என்னவோ ? ஒரு வேளை இவரின் ஆலோசகர்களும் வெளிநாட்டில் இருக்கலாம்.
அடுத்து பாமர மக்களோடு நெருங்கி பழகுவதிலும் மனிதர்
#வெரி_வீக் ரகம் தான்.
இத்தனைக்கும் சிறந்த திட்ட வகுப்பாளர் , பொருளாதார எண்ணங்களும் சர்வதேச உறவுகளையும் கொண்டவர். இளம் வயதிலேயே நாட்டின் கல்வியமைச்சராக இருந்த ஒருவர் மாத்திரமல்லாது பழுத்த ஒரு அரசியல்வாதியும் கூட , இது வரையும் ஊழலில்லாதவர் அதற்கான தேவையுமில்லாதவர் என்றும் அறியப்பட்டவர்.
யுத்த முடிவுக்கு கூட இவர் தான் தனது பிரித்தாளும் தனத்தால் அடித்தளமிட்டார் என்பது பலரும் நினைவு கூற மறக்கும் விடயம் -
அதாவது 2002 ல் பிரதமராய் இருந்த நேரம் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் போது விடுதலை புலிகள் இயக்கத்தை தனது பிரித்தாளும் புத்தியால் இரண்டாக பிளவுப்படுத்தி அந்த அமைப்பை வடக்கிற்குள் மட்டும் மட்டுப்படுத்தினார்.
அதனால் தான் 2005 ஜனாதிபதி தேர்தலில் இவரை துரோகி எனவும் , தேர்தலை பகிஷ்கரிக்குமாறும் விடுதலை புலிகளின் தலைவர் அப்போது மக்களுக்கு அறிவித்தார். இல்லையேல் அந்த தேர்தலில் மஹிந்தர் வீட்டுக்கு போக ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்.
2002 ல் ஏற்பட்ட ஆட்சியையும் கூட தனது தன்னாதிக்க முடிவுகளால் 2004 ல் இழந்தார்.
இதையெல்லாம் பதிய காரணம் இதுவே .
ரணிலானவர் எப்போதும் செய்கிற இன்னொரு விடயம் தான் தனக்கு தேவையானவர்களை தூக்கி வைப்பார். தேவையில்லை என்று நினைப்போரை அமுக்கி வைப்பார்.
அப்படி அவர் தற்போது அமுக்கி வைத்திருப்பவர்கள் அவரது கட்சியின் பிரதி தலைவரான சஜித்தின் பரிவாரங்கள்.
புத்திக்க பத்திரன , ரோசி , சுஜீவ சேனசிங்க , மைத்ரி குணரத்ன ( இவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தும் விட்டார் ) என்று பட்டியல் நீளமானது.
அவர் தூக்கி வைத்திருப்போர் தான் ரவி கருணாநாயக்க , மலிக் சமரவிக்ரம , அர்ஜுன மகேந்திரன் , அர்ஜூன் மகேந்திரனின் மருமகனான அலோசியஸ் என்று இன்னொரு நீளமான பட்டியல்.
இவ்வளவு ஏன் ? எவ்வளவோ அணுபவமான ஆட்கள் இருக்கையில் இவருக்கு விசுவாசமான ஒரு இளைஞருக்கே நாட்டின் முக்கிய அமைச்சான கல்வி அமைச்சையே கொடுத்துள்ளார்.
இப்படி தனக்கு தேவையான சிலரை உச்சாணிக்கொப்பில் ஏற்றப்போய் தான் தனது #மிஸ்டர்_க்ளீன் இமேஜை இழக்கும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டும் உள்ளார்.
முதலாவது தனது ஆஸ்த்தான நண்பர் ரவிக்கு நிதி அமைச்சரை வழங்கியமையும் , இன்னொரு ஆஸ்த்தான நண்பர் அர்ஜுன் மகேந்திரனுக்கு மத்திய வங்கி ஆளுநர் பதவி வழங்கியதும் மிகப்பெரிய சறுக்கலாக மாறியுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் இவர்கள் இருவராலேயே உருவானதாகும். மகேந்திரன் தனது மருமகனின் நிறுவனமான
#பேப்பச்சுவல்_ட்ரஸ்ட்டீஸ் நிறுவனத்திற்கு முறிகளை வழங்கியதே பிரச்சிணைகள் எல்லாவற்றிற்கும் பிரதானமாக அமைந்துள்ளது.
இந்த பிணைமுறியால் அர்ஜூன் அலோசியஸின் அந்த நிறுவனத்தின் 14 மாத இலாபம் மட்டும் 13000 மில்லியன்கள் என்றும் , இது ஒரு அதீத வளர்ச்சி என்றும் ஹெரோயின் வியாபாரம் செய்தால் கூட இதனை எவராலும் பெற முடியாது என்றும் கடந்தவாரம் ஒரு ஊடகம் செய்தி வழங்கி இருந்தது.
அந்த நிறுவனத்தின் சொத்துடைமையும் 1850 மில்லியன்களாக வளர்ந்துள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டிருந்தது.
இது இப்படி செல்கையில் கடந்த வாரம் ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் பிணை முறி விவகாரத்தில் தனது குற்றங்கள் நிரூபணமானால் தான் பதவியை துறப்பேன் என்று அறிவித்ததாகவும் சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதோடு இவ்விடயத்தை விசாரிக்கும் குழுவை அமைத்து விசாரிக்க அணுமதிகள் வழங்கியவர் சாத்சாத் மைத்திரிப்பால ஆவார் என்பதும், நல்லாட்சியின் இரு சக்கரங்களாக ஜனாதிபதியும் பிரதமரும் இருப்பதும் அவதானத்திற்குரியதாகும்
அரசியலில் எதுவும் நடக்கலாம் பொறுத்து பார்ப்போம்