இன்றைய
சமூகச் சீரழிவுகளுக்கு முக்கியகாரணங்களாக அமைவது சினிமாவும் காதலுமே.
இந்தக் காதலினால் இன்றைய இளைஞர்களும் யுவதிகளும் ஒழுக்கச் சீர்கேட்டில்
முழ்கிக் கிடக்கின்றனர். இத்தகைய சமூகச்
சீரழிவை ஏற்படுத்தும் காதலை இஸ்லாம் அனுமதிக்குமா?
ஒரு ஆணும் பெண்ணும் அவர்களுக்கிடையில் நளினமாக குளைந்து
பேசுவதையும் இஸ்லாம் தடுத்துக்கொண்டிருக்கின்றது. " நீங்கள்
அல்லாஹ்வுக்குப் பயந்து கொண்டவர்களானால் (அந்நியருடன்) பேச்சில் நளினம்
காட்டாதீர்கள். ஏனெனில் எவனுடைய உள்ளத்தில் பாவநோய் இருக்கின்றதோ
அத்தகையவன் தனது விருப்பங்களில் ஆசை கொள்வான்" (சூரா அஹ்ஸாப்- 32)
நபி ஸல்லல்லாஹு
அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை
இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின்
விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன. கண் செய்யும்
விபசாரம் தவறான பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் தவறான (உணர்வுகளை
தூண்டிவிடும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது மர்ம உறுப்பு
இதனை உண்மைப்படுத்துகிறது அல்லது பொய்யாக்குகிறது. அறிவிப்பு : அபூஹுரைரா
ரலி நூல் : புஹாரி
காதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
காதல் என்பது விபச்சாரத்திற்கு நிகரானது என்று கூறுகின்றார்களே! இது
சரியா? ''விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான்.
அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு
செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது.
பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது
பொய்யாக்குகின்றது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
No comments:
Post a Comment