Tuesday, August 27, 2013

மனைவியை மோசமாக பலாத்காரத்துக்கு உட்படுத்திய கோட்டை நகரசபை உறுப்பினர் கைது

தன்னுடைய மனைவியை மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கோட்டை நகர சபை உறுப்பினர் தனுக விஷ்வஜித் கைது செய்யப்பட்டுள்ளார். 

தன் கணவர் மூலம் வெலிகட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள தமது வீட்டில் வைத்தே தான் மோசமான முறையில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வெலிகட பொலிஸாரிடம் நகர சபை உறுப்பினரின் மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.

அதன் அடிப்படையிலேயே கோட்டை நகர சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது. 

No comments:

Post a Comment