எகிப்தில் இஸ்லாமிய எழுச்சியை முடக்குவடன் முலம்
எகிப்தில்
இஸ்லாமிய எழுச்சியை முடக்குவதன் மூலம் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும்
சவூதி அரேபியாவும் வளைகுடா நாடுகளும் செய்கின்ற மகத்தான சேவைகளுக்கு
கைமாறாக அமெரிக்கா சிரியாவில் ஷியாக்களை மட்டுப் படுத்துவதற்கு
உடன்பட்டுள்ளதாக தெரிகிறது. ரஷ்யா அமெரிக்காவுக்கு அவசரப் பட வேண்டாம் என
எச்சரித்துள்ளது.
அமெரிக்கா ஏன் அவசரப் படல் வேண்டும், ஒரே
கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஷியாக்களையும் சுன்னிக்களையும் பரந்த
அளவில் மோத விடுவதும், அரபு நாட்டு வளங்களை இயன்றவரை சூறையாடுவதும்,
மேற்கில் வீழ்ச்சி காணும் முதலாளித்துவக் கோட்டையை தூக்கி நிறுத்துவதும் என
பலமுனை கேந்திர முக்கியத்துவமிக்க மூலோபாய திட்டமிடல்களை அமுல் படுத்தி
வருகிறது.
மொத்தத்தில் எல்லா நகர்வுகளும் முறைகேடாகப் பிறந்த
சியோனிஸ சாம்ராஜயத்தை பாதுகாப்பதற்கும் விஸ்தரிப்பதற்கும் தான் என்பது
புலனாகிறது.
”முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும்
உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம்
செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக
இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால்
நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார
மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.எனவே (நபியே!) எவர் இருதயங்களில் நோய்
இருக்கின்றதோ, அத்தகையவர்தாம் அவர்களிடம் விரைந்து செல்வதை நீர் காண்பீர்.
(அவர்களைப் பகைத்துக் கொண்டால்) "எங்களுக்கு ஏதாவது துன்பச்சுழல் ஏற்படுமோ
என்று அஞ்சுகிறோம்" என அவர்கள் கூறுகிறார்கள்; அல்லாஹ் (தான் நாடியபடி)
தன்னிடமிருந்து (உங்களுக்கு) ஒரு வெற்றியையோ அல்லது ஏதாவது ஒரு (நற்)
காரியத்தையோ கொடுத்து விடலாம்;. அப்பொழுது அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்து
வைத்திருந்ததைப் பற்றி கைசேதமடைந்தோராக ஆகிவிடுவார்கள்” ( அல் மாயிதா
5:51-52)
நன்றி-Inamullah Masihudeen
No comments:
Post a Comment