
இவ்வாறான ஆடைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரிக்கு தனது அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாத்திரம் முகத்தை காண்பித்தால் போதுமானது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்களிப்பதற்கு கருப்புக் கண்ணாடி அணிந்து வரவும் தலைக்கவசம் அணிந்துவரவும் தேர்தல்கள் சட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த சட்டத்தையே சிலர் தவறாக பிரச்சாரம் செய்வதாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது. (மு)
No comments:
Post a Comment