Thursday, January 18, 2018

Carry your Iqama or Pay Fine of SR3000

Government Directorate of Passports in Saudi Arabia (Jawazat) has tweeted on their page that its important to carry your residence permit (Iqama) everytime you go outside.
Its important that expats cooperate in carrying Iqama on every checks to maintain security and stability.

Penalty or Fine for not carrying your Iqama
– SR 3,000 fine
OR
– 6 Weeks of imprisonment


Tuesday, January 16, 2018

இஸ்லாத்திற்கு நெருக்கமான கட்சி மக்கள் விடுதலை முன்னணியே – சுனில் ஹந்துநெட்டி

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் மத அடிப்படையில் மிக நெருக்கமான அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணியேயாகும். நாம் திருடுவதில்லை, ஊழலில் ஈடுபடுவதில்லை, பொய் கூறுவதில்லை, மக்களை ஏமாற்றுவதில்லை. எமது கட்சி கூட்டங்களில் புகைத்தலையோ, மதுவையோ காணமுடியாது. இதுவே இஸ்லாத்தின் போதனையுமாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெட்டி தெரிவித்தார்.
விசேட பாராளுமன்ற அமர்வைத் தொடர்ந்து வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர், கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெட்டியுடனான முழுமையான செவ்வியை இங்கே தருகின்றோம்.
கேள்வி: உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வழமைக்கு மாறாக மக்கள் விடுதலை முன்னணி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் போட்டியிடுவதை காணக்கூடியதாக உள்ளது. புதிதாக எந்த பிரதேசங்களில் போட்டியிடுகின்றது?
பதில்: முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் முழுமையாகவும் யாழ்ப்பாணத்தில் 6 சபைகளுக்கும், மட்டக்களப்பில் 6 சபைகளுக்கும் போட்டியிடுகின்றோம். இவ்வாறான தேர்தலொன்றுக்கு மக்கள் விடுதலை முன்னணி இப்பிரதேசங்களில் போட்டியிடுவது இதுவே முதல் தடவையாகும். யுத்தத்தின் பின்னரே நாம் இப்பிரதேசங்களில் எமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்தோம். அப்பிரதேசங்களில் எம்மை ஆதரித்தவர்களே போட்டியிடுகின்றனர்.
கேள்வி: இப்பிரதேசங்களில் மக்கள் விடுதலை முன்னணிக்கான ஆதரவு மற்றும் வரவேற்பு எவ்வாறுள்ளது?
பதில்: உண்மையில், அப்பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள், மக்கள் விடுதலை முன்னணியை சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகவே விளங்கிவைத்திருந்தனர். அது தவறானதாகும். முஸ்லிம்களின் பெயரிலும், தமிழர்களின் பெயரிலும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் கட்சிகள் உள்ளன. அவர்கள் உண்மையிலேயே தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்கத்தை அல்லது எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
தற்போதைய பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பை எடுத்துக்கொண்டால், அவர்கள் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாது ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். வரவு- செலவுத் திட்டத்தை எதிர்க்கவில்லை, பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்க்கவில்லை, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவில்லை, வட பகுதி மீனவர்களின் பிரச்சினைகள் பேசவில்லை. எனவே அவர்கள் தமிழ் மக்களையன்றி, ரணிலையே பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
அதேபோன்றுதான், முஸ்லிம் காங்கிரஸ், றிஷாத் பதியுதீன், அமீர் அலி, அலி சாஹிர் மௌலானா, அதாவுல்லாஹ் என அனைவருமே அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளையே எதிர்பார்க்கின்றனர். அவர்கள் முஸ்லிம் மக்களை விற்பவர்கள். மக்கள் விடுதலை முன்னணி அவ்வாறில்லை. முஸ்லிம், தமிழ், மலையக மக்கள் எமக்கு வாக்களிக்காத போதும் நாம் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினோம். நாம் அவர்களின் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் குரல்கொடுத்தோம். ஜே.வி.பி சிங்கள மக்களின் கட்சியல்ல. நாம் அனைத்து மக்களினதும் கட்சியாவோம். நாம் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம் என்பதை அந்த மக்களும் விளங்கிவைத்துள்ளனர். கோப் குழு பிணைமுறி மோசடியை வெளிப்படுத்தியது. பிணைமுறி மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது அனைவருமே. அங்கே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என்ற பேதமில்லை. மோசடியில் இருந்து காப்பாற்றப்பட்டதில் உள்ள இலாபமும் அனைவருக்குமே. இன்று நான் ஏறாவூருக்கோ, காத்தான்குடிக்கோ சென்றாலும் நீங்கள் தானே கோப் குழுவின் தலைவர் என மக்கள் கேட்கின்றனர். அதுவே எமக்கான ஆதரவு. எமக்கு கிடைக்கும் வாக்குகளோ, பதவிகளோ முக்கியமல்ல. மக்களின் எம்மீதான நம்பிக்கையே எமக்கு தேவை.
தமிழ் முஸ்லிம் கட்சிகள் மீதான மக்கள் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளன. அவர்கள் இனவாதிகள் என்பதால். அரசியல் கட்சிகளும் தலைவர்களும் இனவாதிகளாக இருந்தாலும், பொது மக்கள் என்றுமே இனவாதிகளல்ல. அது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இனவாதத்தை ஆதரிக்காதவர்கள் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர்.
கேள்வி: மக்கள் விடுதலை முன்னணியில் அதிகமான முஸ்லிம் பெண்கள் போட்டியிடுவதைக் காண்கின்றோம். அதுகுறித்து…
பதில்: பெண் பிரதிநிதிகள் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததும் மக்கள் விடுதலை முன்னணியே. அதற்காக பெரும் போராட்டமொன்றே செய்தோம். பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்தை கொண்டுவந்தபோது பொது எதிரணியினர் எதிர்த்தனர். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்ற உறுப்பினரை கொண்டுவந்த பெருமையும் எம்மையே சாரும். இலங்கையின் பெண்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றனர், இலங்கையின் பெண்கள் கடலுக்கு செல்வதை தவிர ஏனைய அனைத்து துறைகளிலும் நாட்டுக்கு பங்களிப்பு செய்கின்றனர். பொருளாதாரத்திந்கு மேற்கொள்ளும் பங்களிப்பின் வீதத்திற்கு, சனத்தொகையின் வீதத்திற்கு அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். அது பிரதேச சபை, மாகாண சபை தாண்டி பாராளுமன்றம் வரை உறுதிசெய்யப்பட வேண்டும். இன்றை பெண்களுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அன்றாட விடயங்களில் தொடர்புபடுகின்றனர்.
எமது கட்சியில் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி முஸ்லிம் பெண்களும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். பல் அங்கத்தவர் தொகுதிகளால் சிறு கட்சிகளுக்கு அநீதியென அதிகமானோர் கூறினர். அது அவ்வாறில்லையென இப்போது உறுதியாகியுள்ளது.
கேள்வி: முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறுபட்ட வெறுப்புப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு பார்க்கின்றது?
பதில்: மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களின் வியாபார, மத, உயிர் வாழும் உரிமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சியொன்றல்ல. இஸ்லாத்தின் அடிப்படையில் ஜே.வி.பிக்கு உதவுவது தவறென்று முஸ்லிம் தலைவர்கள் கூறுகின்றனர். ஜே.வி.பி கொமியுனிஸ்ட் என்பதால். அது தவறானதாகும். அது மக்களுக்கான கட்சியாகும். கட்சியின் அடிப்படைகளில், கொள்கைகளில் கொமியுனிஸம் இருக்கலாம். ஜே.வி.பி 1971, 1988 மற்றும் 1989களில் ஆயுத போராட்டமென்றை மேற்கொண்டது. யாரும் தமிழ் அல்லது முஸ்லிம் என்ற காரணத்தினால் துண்புறுத்தப்படவில்லை. அநியாயக்காரர்களே தண்டிக்கப்பட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியால் யாரும் இனவாத அல்லது மத அடிப்படையில் பாதிக்கப்படவில்லை. அதன் காரணமாகவே கட்சியின் தலைவர்களாக நிஸ்மி, தங்கதுறை போன்றவர்கள் இருந்தனர்.
தெற்கில் சிங்கள இனவாத குழுக்கள் உள்ளனர். பொதுபல சேனா போன்றோர். அவர்களுக்கு நாமும் ஒரு வசனத்தாலாவது உதவியிருந்தால் நிலைமை வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் அவ்வாறு செய்திருப்பின் சிங்கள வாக்குகள் அதிகரித்திருக்கும். நாம் வசனமொன்றின் மூலமாவது இனவாதிகளை ஆதரித்ததில்லை. அவர்கள் சிங்கலே என்கின்றபோது, நாம் மனிதர்கள்- இலங்கையர்கள் என்றோம். வாக்குகளைப் பெற இனவாதத்தை பாவிக்காத ஒரே கட்சி நாமே. மஹிந்த, ரணில் என எவருக்குமே அதனைக் கூறும் தகுதியில்லை. இன்று ரணில் முஸ்லிம் காங்கிரஸின் மரத்தை வெட்டி, யானையை மேலே ஏற்றியுள்ளார். முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் கட்சியொன்றை இல்லாது செய்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சம்பவங்களின் போது குரல்கொடுத்தது நாமே. நோன்பு காலத்தில் பேரீட்சம் பழத்துக்கான வரி அதிகரிப்பை அமைச்சரவை முஸ்லிம் உறுப்பினர்கள் பேசாதபோதே நாம் பேசினோம். நாம் முஸ்லிம்களின் வாக்குபலத்தை எதிர்பார்த்து இவைகளை செய்யவில்லை. நாம் இனவாதிகளல்ல என்பதே அனைத்துக்கும் காரணம். இனவாதிகளுக்கு இலங்கையில் இடமில்லை. இனவாதிகளை ஆதரிக்க வேண்டாம்.
கேள்வி: முஸ்லிம்கள் ஓர் தனித்துவமான சமூகம். முஸ்லிம்களின் தனித்துவங்கள் பாதுகாக்கப் பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றீரா?
பதில்: முஸ்லிம்களின் தனித்துவங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்கின்றோம். மதிக்கின்றோம். அதற்கு நாம் விரலடிக்க முடியாது. முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கும் கலாசாரமொன்றுள்ளது. அனைத்து மத, கலாசார உரிமைகளுக்கும் விரலடிக்காதிருப்பதே அரசாங்கத்தின் கொள்கையாக இருக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி மத உரிமைகளை மீறாது.
முஸ்லிம்களுக்கு மத ரீதியாக அதிகமாக நெருக்கமான கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியே. நாம் திருடுவதில்லை, ஊழலில் ஈடுபடுவதில்லை, பொய் கூறுவதில்லை, மக்களை ஏமாற்றுவதில்லை. இஸ்லாத்திலும் இவையே கூறப்பட்டுள்ளன. ஏனையோர் மதத்தை காட்டிக்கொண்டு அனைத்துவிதமான தீய காரியங்களிலும் ஈடுபடுகின்றனர். நாம் எந்நேரமும் வணங்கிக்கொண்டிராவிட்டாலும், மத கொள்கைகளை மதிக்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணியின் கட்சிக் கூட்டங்களில் புகைத்தலையோ, மதுசாரத்தையோ கண்டுகொள்ள முடியாது. மத போதனைகள் அரசியல் கட்சிகளிலும் தலைவர்களிடமும் இருக்க வேண்டும்.
கேள்வி: டொனால்ட் ட்ரம்ப்பின் ஜெரூஸலம் பிரகடனத்தை எவ்வாறு காண்கின்றீர்? பலஸ்தீன் தொடர்பான உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்: நாம் எப்போதுமே பலஸ்தீனை ஆதரித்த கட்சியொன்று. எமது பிமல் ரத்நாயக்க சர்வதேச மாநாடுகளிலும் பலஸ்தீனை ஆதரித்து உரையாற்றியுள்ளார். இலங்கையிலும் பலஸ்தீன தினத்தை கொண்டாடுகின்றோம். எந்தவோர் நாட்டிலும் மக்கள் உரிமைகளை மீற பிறருக்கு உரிமையில்லை. பலஸ்தீன மக்களின் சுதந்திரத்துக்கு தடையாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போலி இராச்சியமே இஸ்ரேல். ஜெரூஸலம் குறித்த தீர்மானமெடுக்க அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இலங்கையில் பல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பலஸ்தீனுக்கு ஆதரவு வழங்கினோம். உலக ஜனநாயக இளைஞர் சம்மேளனத்திலும் உரையாற்றினோம். அமெரிக்காவின் அட்டூழியத்திற்கு எதிராக கையொப்ப வேட்டையொன்றையும் ஆரம்பித்துள்ளோம். இது முஸ்லிம்களின் பிரச்சினையல்ல. மனிதாபிமான பிரச்சினை.
கேள்வி: மக்கள் விடுதலை முன்னணி முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்போது சிங்கள் ஆதரவு குறைவடைதா?
பதில்: நாம் வாக்குகளை இலக்குவைத்து அரசியல் செய்யவில்லை. உண்மைக்காக போராடி வாக்குகளை இழந்தாலும் பரவாயில்லை. சிங்கள வாய்களால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவது பிரச்சினையென்றால், உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் எமது உண்மையான முஸ்லிம் தலைவர்களை தெரிவுசெய்யவும். அவர்கள் உங்கள் பிரச்சினைகளை பேசுவார்கள். உங்கள் முஸ்லிம் தலைவர்களை நியமித்துக்கொள்ள நாம்
வேட்பாளர்களை இறக்கியுள்ளோம். பிரதிநிதிகளை தெரிவுசெய்துகொள்ளவும். உங்களது வீட்டில் 5 வாக்குகள் இருப்பின் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலசுக, முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒன்றொன்றாக கொடுத்துவிட்டு இரண்டை எமக்கு தாருங்கள். வருடமொன்றில் நாம் யாரென புரிந்துகொள்வர்.
கேள்வி: பிணைமுறி மோசடி குற்றச்சாட்டிலிருந்து பிரதமர் விடுபட்டுவிட்டதாக பிரசாரங்களை காண்கின்றோம். உண்மையிலேயே பிரதமருக்கும் மோசடிக்கும் தொடர்பில்லையா?
பதில்: மலத்தில் விரலை விட்டதும் வாசனைமிக்கதாக இருக்குமா? துர்நாற்றமாக இருக்குமா? மலம் துர்நாற்றமென தெரிந்துகொண்டு யாரும் விரலைவிட மாட்டார்களே. தன் கையால் தவறொன்று நிகழ்ந்திருப்பின் தவறை புரிந்து, ஏற்றுக்கொண்டு நீதியாக நடப்பதே தலைவரொன்றின் பண்பு. பிரதமர் ரணில் ஆரம்பத்திலிருந்தே மலத்தால் குளித்தார். அவர் குறித்து, ஏனையோரின் உடம்பிலும் பூசினார். அதனாலேயே சிலர் இராஜினாமா செய்தனர். பிணைமுறி மோசடியை நாட்டுக்கு முதன்முதலாக தெளிவுபடுத்தியது நான். அதனைத் தொடர்ந்து எமது தலைவர் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றினார். பிரதமர் மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தார். அதற்கு சிரிகொத ஆதரவாளர்களை நியமித்தார். அதனைத் தொடர்ந்தே கோப் குழு விசாரணைகளை ஆரம்பித்தது. இரண்டாவது அறிக்கை என்னால் தயாரிக்கப்பட்டது. அதற்கும் தடைகள் வந்தன. இப்போதே இவையனைத்தும் அலோசியஸின் பணத்தால் இடம்பெற்ற ஆட்டமென தெரியவருகின்றது.
இவையனைத்துமே மலத்தை பூசிக்கொண்ட வேலையே. மத்திய வங்கி ஆளுநருக்கு குற்றச்சாட்டு வந்ததும் அவரை ஒதுக்கிவிட்டு விசாரணைகளை முன்னெடுத்திருந்தால் இப்பிரச்சினைகள் எதுவும் இருந்திருக்காது. துர்நாற்றமேற்பட்டிருக்காது. மனதில் திருட்டுத்தனம் இருந்ததால்தானே திருட்டை மறைக்க முயற்சித்தனர். பூனைகள் மலம் கழித்தவுடன் மூடிவிட முயற்சிக்கும். பூனை கல்லொன்றில் மலம் கழித்துவிட்டு மூடி மறைக்க முயற்சிசெய்யும்போது உடம்பில் பூசிக்கொள்ளும். இதுபோன்ற வேலையொன்றே பிரதமருக்கும் அவரது குழுவினருக்கும் இடம்பெற்றுள்ளன.
பிணைமுறியென்பது அரசாங்கத்திற்கு நிகழ்ந்த நட்டம் மாத்திரமல்ல. நாட்டு மக்களையும் பாதித்துள்ளது. 8 சதவீதமாக இருந்த வட்டிவீதம் 16ஆக அதிகரித்தது. பொருளாதாரம் பாதித்தது. வங்கியில் கடன் பெற்றவர்களை பாதித்தது. விவசாயிகள் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அலோசியஸிடம் நிதியை திருப்பிப் பெற்று, சொத்து செல்வங்களை அரசுடைமையாக்குவதில் மாத்திரம் பாதிப்புகள் நின்றுவிடப்போவதில்லை. மக்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு யார் பொறுப்பு? 5 மாதங்களில் 1100 பில்லியன் எனின் இது தொடர்ந்திருந்தால் நாட்டின் நிலைமை என்ன? இதனை நேரகாலத்துடன் கண்டறிய முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
கேள்வி: ஒரு தடவையே பதவி வகிப்பதாக கூறிக்கொண்டு வந்த மைத்திரி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கும் தயாராகின்றாரா?
பதில்: 18ஆவது யாப்பு சீர்திருத்தத்தை மேற்கொண்டு, அதிக காலம் இருக்க முற்பட்ட மஹிந்தவுக்க நடந்தது என்ன? அதிக காலம் நீடிக்க தடுமாறுபவர்கள் இருக்க வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே விடைபெற வேண்டிவரும். மைத்திரிக்கும் கூற இருப்பது அவ்வளவுதான். அதிக காலம் இருக்க முயற்சித்தவர்களின் வரலாற்றை நோக்கவும். அதிக தூரம் சென்று பார்வையிட தேவையில்லை. அப்பம் சாப்பிட்ட தோழரின் வரலாற்றை பார்த்தால் போதும்.
கேள்வி: பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அடிதடிகளை எவ்வாறு காண்கின்றீர்?
பதில்: கவலைக்குரிய விடயம். இதுவா? நாட்டின் பாராளுமன்றமென்று எண்ணத்தோன்றியது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாது, உடல் பலத்தை காட்டுவது அசிங்கமானது. உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கு தாம் சண்டியர்கள் என்று காட்டவே இந்த சண்டை. இவர்களை பாராளுமன்றம் அனுப்பிய மக்கள், வாக்களித்த கைகளை துண்டித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள் உள்ளூராட்சிமன்றங்களுக்கும் பொருத்தமற்றவர்கள். நாம் அறிவுசார் கலந்துரையாடல்களையே வரவேற்கின்றோம்.
– ஆதில் அலி சப்ரி –

Sunday, January 14, 2018

அக்பர் டவுன் பெயர் மாற்றம் – வர்த்தமானி வெளியீடு

கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச சபையில் அமைந்திருக்கும் அக்பர் டவுன் என்ற வட்டாரத்தை எடேரமுள்ள 01 என பெயர் மாற்றுவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைசச்சர் பைஸர் முஸ்தபா தீர்மானித்துள்ளார்.
குறித்த பெயர் மாற்றம் தொடர்பிலான 2052/34 என்ற விசேட வர்த்தமானி அறிக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ம் திகதி வெளியிடப்பட்ட 2006/44 என்ற வர்த்தமானி அறிக்கையில் மஹர பிரதேச சபையின் 31வது வட்டாரம் அக்பர் டவுன் என பெயரிடப்பட்டிருந்தது.
மஹர பிரதேச சபைக்குற்பட்ட எடேரமுள்ள தெற்கு, எடேரமுள்ள கிழக்கு பின்னமெத மேற்கு மற்றும் அக்பர் டவுன் ஆகிய கிராம சேவை பிரிவுகள் புதிதாக அமைக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, அக்பர் டவுனை தேர்தல் வட்டாரமாக பிரகடனப்படுத்தியமைக்கு பிரதேசவாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்ததை அடுத்து இவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது eeeee

Wednesday, January 10, 2018

பாராளுமன்றில் கைகலப்பு ; மயக்கமுற்ற உறுப்பினர் மருத்துவ நிலையத்தில் அனுமதி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் விசேட உரையாற்றிய போது கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு பிரதேவசித்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக கட்சி தலைவர்களின் விசேட கூட்டத்திற்காக பாராளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள
சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதன் பொருட்டே, விசேட பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெற்றது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இடம்பெற்ற கைகலப்பில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அணிந்திருந்த சட்டைகளும் கிழிந்துள்ளதாகவும். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன மயக்கமுற்று, பாராளுமன்ற மருத்துவ நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஸ


புர்கா அணிந்து கொண்டு வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லலாம்- தே.ஆ.

முஸ்லிம் பெண்களில் சிலர் அணியும் முகத்தை மறைக்கும் ஆடையுடன் (புர்கா) வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதில் எந்தவித தடையும் கிடையாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஆடைக்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரிக்கு தனது அடையாளத்தை உறுதி செய்வதற்கு மாத்திரம் முகத்தை காண்பித்தால் போதுமானது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
வாக்களிப்பதற்கு கருப்புக் கண்ணாடி அணிந்து வரவும் தலைக்கவசம் அணிந்துவரவும் தேர்தல்கள் சட்டத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறுவோர் வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த சட்டத்தையே சிலர் தவறாக பிரச்சாரம் செய்வதாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.   (மு)

Friday, January 5, 2018

சமூர்த்தி, விவசாயம் போன்ற உதவிகள் வழங்குவதை பெப்ரவரி 15 வரை நிறுத்தவும் – மஹிந்த

சமூர்த்தி, விவசாயம் போன்ற உதவிகள் வழங்குவதை பெப்ரவரி 15ம் திகதி வரை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தேர்தல் காலத்தில் அலுவலக நேரம் அல்லாத விடுமுறை காலத்திலும் தமது உத்தியோகபூர்வ பெயரை பயன்படுத்தி அபேட்சகர்களுக்கு ஆதரவு வழங்கும் அல்லது பொருட்களை வழங்கும் அதிகாரிகளை தூர பிரதேச அலுவலகங்களுக்கு மாற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சுக்களின் செயலர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Thursday, January 4, 2018

இவ் வருடத்தில் புதிய 100 சதோச விற்பனை நிலையங்களை அமைக்க திட்டம் – ரிஷாட் பதியுதீன்

இவ் வருடத்தில் நூறு சதோச விற்பனை நிலையங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவற்றில் 25ஐ சூப்பர் மெகா வர்த்தக நிலையங்களாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் 400 சதோச விற்பனை நிலையங்கள் உள்ளன. இதேவேளை, நடமாடும் விற்பனை வாகனங்களை இவ் வருடத்தில் நூறாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.(ச)

சமூக ஊடகங்களில் சூடுபிடிக்கும் பேருவளை சுப்பர் மார்க்கட் விவகாரம் – நடந்து என்ன?

பேருவளை நகரில் அமைந்துள்ள பிரபல சுப்பர் மார்க்கட் கிளையொன்றில் நேற்று மாலை (01/01/2018) , பேருவளை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் இருவர் (சகோதரனும், 18 வயது சகோதரியும்) பொருட்களை வாங்குவதற்காகச் சென்றுள்ளனர். தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் அதற்கான பணமும் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் வெளியேற முற்பட்ட வேளையில் ”உங்களைச் சோதனை செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் பொருட்களை திருடியுள்ளதாக வாடிக்கையாளரொருவர் எங்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்” என காவலாளியொருவர் அந்தச் சகோதரியை மீண்டும் உள்ளே அழைத்துள்ளார். ”நாங்கள் திருடவில்லை” என இருவரும் கூறியபோதும் அவர்கள் பலாத்காரமாக அச்சகோதரியை உள்ளே அழைத்துச்சென்று பெண் காவலாளி ஒருவர் சோதனையிட்டுள்ளார். அச்சகோதரியின் நிகாப் (முகத்திரை) மற்றும் ஹபாயாவை கழற்றியே அப்பெண் காவலாளி சோதனையிட்டுள்ளார். சோதனை நடவடிக்கைகளின் பின்னர் சந்தேகத்திற்கிடமான திருட்டு பொருட்கள் எதுவுமில்லை எனக் காவலாளி கூறியுள்ளார்.
இவ்வாறு வீணாக மானபங்கப்படுத்தப்பட்டதன் காரணமாக அச்சகோதரி உள நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார். இதன் காரணமாக குறித்த சுப்பர் மார்க்கட்டில் இருந்த ஏனைய முஸ்லிம் வாடிக்கையாளர்களும் இதற்கெதிராக நிர்வாகத்திடம் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். இதன்போது ஸ்தலத்திற்கு பேருவளை பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இத்துரதிஷ்டமான சம்பவத்தை அடுத்து விடுமுறையில் சென்றுள்ள கிளை முகாமையாளர் குறித்த சகோதரியின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு நடந்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பேருவளை நகரில் அமைந்துள்ள குறித்த பிரபல சுப்பர் மார்க்கட் கிளை அண்மையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. பேருவளை முஸ்லிம்களே பெரும்பாலான வாடிக்கையாளர்களே உள்ளனர். இதன் காரணமாக பேருவளையில் குறித்த சுப்பர் மார்க்கட் கிளையை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டுமெனச் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் முன்னெடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)
– ரூமி ஹாரிஸ் –  

ATM withdrawals will not be charged VAT

Saudi Arabia General Secretary of the the Committee of Information and Bank Awareness Talat Hafiz informed that there will be No VAT (Value added Tax) on ATM Cash Withdrawals.



Good News for Expatriates who were worried of ATM transacations, So VAT will not be chargd on ATM withdrawals.
Earlier there were many rumours on Social media and on fake websites that VAT will be charged if a customer of a particular bank withdraws money from an ATM of another bank.
This has been denied and there will be no VAT on ATM withdrawals of customers bank or any other bank.
All Financial transactions such as loans, lending Fees, Credit Card, deposit & Savings transactions will be exempted from VAT.

Wednesday, January 3, 2018

VAT Taxpayer Lookup Checks if Business is VAT registered or Not

GAZT has provided a tool called ‘VAT Taxpayer Lookup’ which allows you to any business supplier is VAT registered or not. You can search by VAT Account Number comprised of 15 digits. You can find the VAT Account Number on the invoice (examples below). Searching by VAT Account Number is a recommended method.

VAT Taxpayer Lookup-SaudiExpatriate.com

VAT Taxpayer Lookup to identify Business Supplier is VAT registered or Not
Alternatively you can also search by:
– TIN (Taxpayer Identification Number) comprised of 10 digits, which can be found on VAT registration certificate of supplier
– CR (Company Registration) comprised of 10 digits, which the supplier should provide you upon request
– VAT Certificate No. comprised of 15 digits, which can be found on VAT registration certificate of supplier
To perform the search, you should follow the 3 steps:
• Step 1: Select your search parameter (VAT Account Number or TIN or CR or VAT Certificate No.)
• Step 2: Enter the exact parameter number in the search field
• Step 3: Click on “Search” button to obtain the results

Saturday, December 23, 2017

Saudi Arabia 2018 Budget Highlights | Saudi Budget 2018

Custodian of Holy Mosques King Salman of Saudi Arabia has announced Saudi Arabia 2018 Budget in the Saudi Cabinet session which happened at Al-Yamamah Palace in Saudi Arabia.
King Salman approved the State’s General Budget for the Fiscal year 2018 on Tuesday and it is said that the 2018 state budget is the biggest ever Budget (Expenditure) in the history of Saudi Arabia and the plan for funding it are from various sources.

2018 Budget Funding Sources:
50% from Oil Revenue
30% from Non-Oil revenue
12% from debt
8% from Government Balances
The decline in the government’s budget deficit will slow next year. The 2018 deficit is projected at 195 billion riyals, or 7.3 percent of gross domestic product, against an actual 230 billion riyals in 2017.

Saudi Arabia 2018 Budget Highlights
– 85 Billion Saudi Riyals (SAR) to be generated by Tax on Goods & Services in 2018
– Saudi Budget 2018 allocates 2.5 Billions Saudi Riyals a month to the Citizens’ account in 2018
– Public debts % compared to GDP will not exceed 25% during the Fiscal balance phase
– General reserves will not decrease lesser than 250 Billion Saudi Riyals during the fiscal yeay
– General Expenditure in 2018 will also include General Budget Expenditure, Public Investment Fund and other Development Funds
– Increase in Energy, Water, Electricity for Expatriate taxes will continue to increase as per the earlier announcements

Tuesday, December 12, 2017

35 வருடங்களுக்கு பின் சவுதி அரேபியாவில் திறக்கப்படும் தியேட்டர்கள்

அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த பல வருடங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் சமீபத்தில் இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.
35 வருடங்களுக்கு பின் சவுதி அரேபியாவில் திறக்கப்படும் தியேட்டர்கள்
சமீபத்தில் சவுதியில் பெண்கள் காரோட்ட அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு தியேட்டர்கள் செயல்படவும் இளவரசர் அனுமதியளித்துள்ளார். இதனால் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சவுதியில் திரையரங்குகள் செயல்படவுள்ளன
வரும் 2018ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் திரையரங்குகள் புத்தம் புது பொலிவுடன் திறக்கப்படவுள்ளதாகவும், மற்ற நாட்டு மக்கள் போல் இனி சவுதி மக்களும் தியேட்டருக்கு சென்று திரைப்படங்களை பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Monday, December 11, 2017

Loans, ATM Services Free from VAT – Saudi TAX Authority

GAZT – General Authority of Zakat & Tax has announced that ATm services and loans will be free from VAT.
Interest or lending fees charged with an implicit margin for finance will be exempted from value added tax (VAT).
GAZT said that interest fees charged on Lonads, Credit Cards, Finance leasing, Hire Purchase, mortgages all are exempted from VAT.
Rumors about ATM withdrawals, the GAZT officials told the workshop that customers will not be charged for withdrawing or transferring money from their accounts using ATMs.

However, the 5-percent tax will be imposed on banks’ administrative charges such as the issuance of checkbooks, statements of accounts and safety deposit boxes and the customer will have to bear this expense.
Moreover, rental prices of residential properties, life insurance contract and issue or transfer of a debt security, equity security, or any other transferable document recognizing an obligation to pay a monetary amount to the bearer are also exempt from the VAT.